இயற்கையின் பரிசு வாழ்க்கை
வாழ்க்கையின் பரிசு காதல்
காதலின் பரிசு முத்தம்
உன் இனிய முத்தங்களை
காத்திருக்க வைக்காதே
உன் உதடுகள் உலர்ந்து போகும்
என் கண்கள் ஈரமாகும்
ஆமாம் கண்ணே
பாதுகாத்து வைத்த முத்தங்களெல்லாம்
வீணடிக்கப்பட்ட முத்தங்கள்
இது
மௌனம் பேசுகின்ற பாஷை.
அளவில்லா சந்தோஷத்தின் ஒரு
முன்னோடி உறுதிமொழி
இளமை இதயங்களின் இனிய முடிச்சு
ஊமை ஒப்பந்தம்
காதலின் முதல் பனிப்பொழிவு
நீயும் நானும் அணைத்தபடி
காதல் கொண்ட நடனமாடும்
இந்த இனிய இரவிற்காக
எத்தனை தவமிருந்தேன்
உன் கைகளை இறுக்கி எடுத்துரைப்பேன்
நீ அறியாத காதலை உனக்கு உணர்த்துவேன்
வா அன்பே வா
அணைப்பும் வெம்மையும் சொல்லட்டும்
பயங்களும் ஐயங்களும் விலகி ஓடட்டும்
நாம் பரிமாறும் இந்த முதல் முத்தத்தில்
உன் கரங்கள் என்னைத் தழுவ
நான் உன் மேல் சாய
நம் இருவரின் சுவாசம் ஒன்றாக
நான்கு கண்களும் மூட
இதழ் இரண்டும் இணைய
மென்மையாக இனிமையாக
மேனியெங்கும் மின்சாரம் தாக்க
உள்ளத்து உணர்வுகள் எங்கோ செல்ல
உன் கள்ளச்சிரிப்பு சொல்லியது
”இது மொத்த குத்தகையின்
ஒரு சிறிய அச்சாரம்” என்று
இனியவளே
காதோரமாக நீ முணுமுணுக்கவில்லை
என் இதயத்தோடு பேசுகிறாய்
உதட்டுக்கு நீ முத்தம் கொடுக்கவில்லை
என் ஆன்மாவோடு கலக்கிறாய்
உப்புத்தண்ணீரைக் குடிப்பது போல் தான்
இந்த முதல் முத்தம்
கொஞ்சம் குடித்தேன்
இன்னும் நிறைய
தாகம் எடுக்கிறது.
ஆனாலும் முதல் முத்தமே
சூரிய ஒளி பனித்துளியைக் குடிப்பது போல்
என் உயிரையே உறிஞ்சிச் சென்று விட்டது
Sunday, October 25, 2009
Wednesday, October 14, 2009
அழியாத காதல்
பேசும்போது காதலிக்கப் பயந்தேன்
காதலிக்கும்போது
பிடித்துக் கொள்ளப் பயந்தேன்
இப்போ காதல் இருக்கு...
ஆனால் பயமாயிருக்கு...
ஆனாலும்
உன்னை விடவும்
பயமாயிருக்கு....
ஒரு முறை வந்தால்
ஜோதியாய் வலம் வரும் போல
நீ என்னவன் என்பதால்
ஒரு முறை அழுதேன்
மலரும் நினைவுகளுக்காக
ஒரு முறை
நடந்தது நடப்பது
நடக்கப்போவதுக்காக
ஒரே ஒரு முறை
அழகு காதலைத் திறக்கலாம்
அழகு அறிவைத் திறக்கலாம்
இனிப்பான உன்
வார்த்தை மட்டுமே
என் இதயத்தைத் திறந்தது
மூன்று நிமிடம் ஆனது
அதை நிரூபிக்க
வாழ்க்கை முழுதும்
போதவில்லையே....
Sunday, August 23, 2009
முத்துணைச் செல்வம்
உடலோடும் உயிரோடும்
ஊடுருவி
உறைந்திருக்கிறது
ஆயிரம் உணர்வுகள்
ஆனாலும் என்னோடு
கலந்து துணையாய்
இணந்திருப்பது
மூன்றே மூன்று
தெளிவான சொல்
கொடுத்த
தன்னம்பிக்கையும்
பரந்த அறிவை
நல்கிய
நல்ல நட்பும்
உண்மையான அன்பை
உரிமையாக்கிய
இனிய காதலும்
சிலந்தி வலையாய்
பின்னுகிறது
என் வாழ்க்கையில்
எல்லோராலும் பேசப்பட்டாலும்
இதயத்தால் மட்டுமே
பரிமாறப்பட்டது காதல்
தூரத்தில் நான் நின்றாலும்
காலை நனைத்துச்
சென்ற அலை போல்
நான் தேடிச் செல்லாது
என்னை நாடி வந்தது
காதல்
தீய எண்ணங்களை
வடிகட்டி
நல்லெண்ணங்களை
விதைத்தது
நம்பிக்கை
புது முயற்சிகளை
செய்யத் தூண்டியது
காதல்
தொடங்கு என்று
ஆணையிட்டது
தன்னம்பிக்கை
அருகில் இருந்து
செய்து முடித்தது
நட்பு
சில ஏக்கர் கூடிய
விளையாட்டுத்திடல்
இந்தக் காதல்
பரந்து விரிந்திருக்கும்
நம் புவியாய்
இந்த நட்பு
பல பூமிகள் கொண்ட
பேரண்டமாய்
இந்த நம்பிக்கை
காதல் வெண்ணிலவாகி
ரகசியமாய் குளுமை தந்தது
நட்பு பகலவனாகி
பகிரங்கமாய் வெளிச்சம் அளித்தது
நம்பிக்கை நட்சத்திரமாகி
எந்த நேரமும் மின்னியது
மூன்றும் என்னோடு
முத்தமிழ் போல்
முக்கனி போல்
முத்துணையாக
இனிக்கிறது.........
ஊடுருவி
உறைந்திருக்கிறது
ஆயிரம் உணர்வுகள்
ஆனாலும் என்னோடு
கலந்து துணையாய்
இணந்திருப்பது
மூன்றே மூன்று
தெளிவான சொல்
கொடுத்த
தன்னம்பிக்கையும்
பரந்த அறிவை
நல்கிய
நல்ல நட்பும்
உண்மையான அன்பை
உரிமையாக்கிய
இனிய காதலும்
சிலந்தி வலையாய்
பின்னுகிறது
என் வாழ்க்கையில்
எல்லோராலும் பேசப்பட்டாலும்
இதயத்தால் மட்டுமே
பரிமாறப்பட்டது காதல்
தூரத்தில் நான் நின்றாலும்
காலை நனைத்துச்
சென்ற அலை போல்
நான் தேடிச் செல்லாது
என்னை நாடி வந்தது
காதல்
தீய எண்ணங்களை
வடிகட்டி
நல்லெண்ணங்களை
விதைத்தது
நம்பிக்கை
புது முயற்சிகளை
செய்யத் தூண்டியது
காதல்
தொடங்கு என்று
ஆணையிட்டது
தன்னம்பிக்கை
அருகில் இருந்து
செய்து முடித்தது
நட்பு
சில ஏக்கர் கூடிய
விளையாட்டுத்திடல்
இந்தக் காதல்
பரந்து விரிந்திருக்கும்
நம் புவியாய்
இந்த நட்பு
பல பூமிகள் கொண்ட
பேரண்டமாய்
இந்த நம்பிக்கை
காதல் வெண்ணிலவாகி
ரகசியமாய் குளுமை தந்தது
நட்பு பகலவனாகி
பகிரங்கமாய் வெளிச்சம் அளித்தது
நம்பிக்கை நட்சத்திரமாகி
எந்த நேரமும் மின்னியது
மூன்றும் என்னோடு
முத்தமிழ் போல்
முக்கனி போல்
முத்துணையாக
இனிக்கிறது.........
Thursday, August 20, 2009
இமைகளில் உன் இனிய சுமை
எப்படியெல்லாம்
என்னை ரசித்தாய்
எப்பொழுதெல்லாம்
என்னை ரசித்தாய்
காற்றில் என்
கூந்தல் அசைய
அது ஆயிரம் சேதி
சொல்கிறது
என்றாயே
சூரியக் கதிர்களும்
திடமாய் வீச
வானத்தில் இருந்து
ஒரு துளி அமுதமும்
மெல்ல என் கன்னத்தில்
விழுந்தோட
அதைப் பிடிக்க நீ
கையேந்தி நின்றாயே
விழி மூடி சிறிது நேரம்
நான் லயிக்க
பின் இமைத்த நேரம்
பார்த்து ”தேவதை
உன் கண்ணைத்
திறந்து விட்டது”
என்றாயே
உனைத் தழுவ வேண்டும்
என நினைத்து தானோ
சூரியனும் பொன் நிறக்
கதிர்களை தூதாய்
அனுப்பினான் என்றாயே
மழை வருமா
என நான்
வானம் பார்த்தால்
”கரு விழிகளும்
கருமேகமும்
இணைந்தன”
என்றாயே
உன் ஒவ்வொரு
ரசனையும் இனிய
நினைவாய் நெஞ்சில்
சாமரம் வீசுகிறது
இன்றும் நீ ரசித்த
இனிய கானம்
மென்மையாய்
ஒலிக்கிறது
முழு நிலவும்
முல்லைப்பூவாய்
சிரிக்கிறது
நீ முத்தமிட்ட
அந்த இனிய
இரவை நினைத்து
மெத்தையில்
நான் துவழ்கிறேன்
தூக்கம் கொடுப்பாயா
என் தலைவா............................
என்னை ரசித்தாய்
எப்பொழுதெல்லாம்
என்னை ரசித்தாய்
காற்றில் என்
கூந்தல் அசைய
அது ஆயிரம் சேதி
சொல்கிறது
என்றாயே
சூரியக் கதிர்களும்
திடமாய் வீச
வானத்தில் இருந்து
ஒரு துளி அமுதமும்
மெல்ல என் கன்னத்தில்
விழுந்தோட
அதைப் பிடிக்க நீ
கையேந்தி நின்றாயே
விழி மூடி சிறிது நேரம்
நான் லயிக்க
பின் இமைத்த நேரம்
பார்த்து ”தேவதை
உன் கண்ணைத்
திறந்து விட்டது”
என்றாயே
உனைத் தழுவ வேண்டும்
என நினைத்து தானோ
சூரியனும் பொன் நிறக்
கதிர்களை தூதாய்
அனுப்பினான் என்றாயே
மழை வருமா
என நான்
வானம் பார்த்தால்
”கரு விழிகளும்
கருமேகமும்
இணைந்தன”
என்றாயே
உன் ஒவ்வொரு
ரசனையும் இனிய
நினைவாய் நெஞ்சில்
சாமரம் வீசுகிறது
இன்றும் நீ ரசித்த
இனிய கானம்
மென்மையாய்
ஒலிக்கிறது
முழு நிலவும்
முல்லைப்பூவாய்
சிரிக்கிறது
நீ முத்தமிட்ட
அந்த இனிய
இரவை நினைத்து
மெத்தையில்
நான் துவழ்கிறேன்
தூக்கம் கொடுப்பாயா
என் தலைவா.........................
Friday, August 14, 2009
மழையோடு சில உளறல்
உன்னோடு தனிமையில்
உறவாட வேண்டும்
சில மணித்துளிகள்
எனக்கென பிரத்யேகமாய்
என்னைத் தேடி ஆசையாய்
என் வீட்டு முற்றத்தில் விழு
சூரியனை மறைத்தாய்
வெப்பத்தைக் குறைத்தாய்
குளிர்ந்ததடி என் மனம்
மண்ணின் விழுந்த உன் துளிகள்
செல்லும் இடம் நோக்கி
பாய்கிறது என் மனமும்
நீ தான் அடர்ந்த காடு
நீ தான் அதில் தோன்றும் ஆறு
நீ தான் அது கலக்கும் பெருங்கடல்
என் மீது விழுந்து
பாவம் தீர என்னைக் கழுவி
தனியே விலகிச் செல்லாதே
என் உணர்வு புரிகிறதா
உன்னைத் தொடர்ந்து உன்னுடன்
நானும் வர விரும்புகிறேன்
கூரையைக் கிழித்து பெய்கிறாய்
காற்றில் சிலிர்த்து பறக்கிறாய்
பொய்களைத் தகர்த்து எறிகிறாய்
வயல்களில் விழுந்து
விதைகளைச் செழிப்பது போல்
மனதில் ஆசைகளை வளர்க்கிறாய்
பருவக்காற்றால் தோன்றிய நீ
பருவப் பெண்ணிடம் சேர்ந்து விடு
வசந்தமாய் நான் வாழ்வேன்
இசையாகப் பொழிந்து
இனிய ராகம் பாடி
என்றும் என்னுடனே இரு.........................

Wednesday, August 12, 2009
அடிமைச்சுமை
விரக்தியின் கொடுமையில்
வீழ்ந்து போனாய்
நகர வாழ்க்கையிலிருந்து
நரக வாழ்க்கை
தேர்ந்தெடுத்தாய்
முள்ளை முள்ளால்
எடுக்க நினைத்து
வாழ்க்கையின் கண்ணைக்
குத்திக் கொண்டாய்
சிலரிடம் மட்டும் பேசினாய்
பலரை நன்றாய் “கவனித்தாய்”
சூரியன் உதிப்பதும்
அஸ்தமிப்பதும் கூட
அந்தந்த திசையில் தான்
உன் உருட்டுக்கட்டைகளுக்கும்
வீச்சரிவாள்களுக்கும்
திசைகளே இல்லை
மனம் பேசும் வார்த்தைகளும்
உனக்குக் கேட்பதில்லை
அவலங்களின் கூக்குரலும்
உனக்குக் கேட்பதில்லை
நீ சேர்த்த தங்கத்தில்
ஜொலிக்கிறது
உன் மனைவி உடல்
நீ பறித்த தங்கத்தில்
கருகியது
பல குடும்ப மலர்
ஒருவனை அழித்து விட்டால்
நீ ”கடவுளின் மறுபாதி”
என நீ நினைத்தால்
ஒருவனை உருவாக்குகிறவன்
கடவுளின் மறுபிறப்பு
என எப்போது உணர்வாய்?
நீ அடியாள் தான்
என்றுமே
யாருக்கோ அடிமைதான்
அந்தச் சுமையிலிருந்து
வெளியே வருவாயா?
வறுமையைத் துணிந்து
தேவைகளை அறிந்து
யதார்த்த வாழ்க்கை
நீயும் வாழ்வாயா?
வீழ்ந்து போனாய்
நகர வாழ்க்கையிலிருந்து
நரக வாழ்க்கை
தேர்ந்தெடுத்தாய்
முள்ளை முள்ளால்
எடுக்க நினைத்து
வாழ்க்கையின் கண்ணைக்
குத்திக் கொண்டாய்
சிலரிடம் மட்டும் பேசினாய்
பலரை நன்றாய் “கவனித்தாய்”
சூரியன் உதிப்பதும்
அஸ்தமிப்பதும் கூட
அந்தந்த திசையில் தான்
உன் உருட்டுக்கட்டைகளுக்கும்
வீச்சரிவாள்களுக்கும்
திசைகளே இல்லை
மனம் பேசும் வார்த்தைகளும்
உனக்குக் கேட்பதில்லை
அவலங்களின் கூக்குரலும்
உனக்குக் கேட்பதில்லை
நீ சேர்த்த தங்கத்தில்
ஜொலிக்கிறது
உன் மனைவி உடல்
நீ பறித்த தங்கத்தில்
கருகியது
பல குடும்ப மலர்
ஒருவனை அழித்து விட்டால்
நீ ”கடவுளின் மறுபாதி”
என நீ நினைத்தால்
ஒருவனை உருவாக்குகிறவன்
கடவுளின் மறுபிறப்பு
என எப்போது உணர்வாய்?
நீ அடியாள் தான்
என்றுமே
யாருக்கோ அடிமைதான்
அந்தச் சுமையிலிருந்து
வெளியே வருவாயா?
வறுமையைத் துணிந்து
தேவைகளை அறிந்து
யதார்த்த வாழ்க்கை
நீயும் வாழ்வாயா?
Sunday, August 9, 2009
முத்தத்தின் நியதிகள்
முதல் முத்தத்தின்
நினைவோடு பெண்
கடைசி முத்தத்தில்
கரைந்தவனாய் ஆண்
முத்தம்
ஆடம்பரமில்லாதது
எளிதில் கிடைப்பது
எளிதில் மறக்கப்படுவது
சுயநலமில்லாதது
பகிரப்பட வேண்டியது
கம்யூனிச கொள்கை போல்
வார்த்தைகள் மிகும்போது நிறுத்த
இயற்கை அளித்த எளிய படைப்பு
ஏங்கியிருந்த
அன்பு மனங்கள்
முதல் முத்தத்தைத் தயங்கி
இரண்டாவதை ஊக்குவித்து
மூன்றாவதை இயல்பாய்
நான்காவதை உரிமையாய்
ஜந்தாவதை ஆசையோடு
பெற்று, கொடுத்து
களித்து, களைத்து
ஓய்வு பெறும்
உண்மையின் உறைவிடம்
காதலென்றால்
பொய்மையின் மறைவிடம்
முத்தம்
புதிதாய்ப்
பிறக்க வேண்டும்
இனிமையாய்
விளையாட வேண்டும்
யார் கொடுத்து
யார் வாங்க என்ற
குழப்பம் வேண்டும்
பிரிந்திருந்த போது
சேர்த்து வைத்த
முத்தமெல்லாம்
இணையும்போது
சுவைக்கப்படவேண்டும்
இது முத்தத்தின் விதி
நினைவோடு பெண்
கடைசி முத்தத்தில்
கரைந்தவனாய் ஆண்
முத்தம்
ஆடம்பரமில்லாதது
எளிதில் கிடைப்பது
எளிதில் மறக்கப்படுவது
சுயநலமில்லாதது
பகிரப்பட வேண்டியது
கம்யூனிச கொள்கை போல்
வார்த்தைகள் மிகும்போது நிறுத்த
இயற்கை அளித்த எளிய படைப்பு
ஏங்கியிருந்த
அன்பு மனங்கள்
முதல் முத்தத்தைத் தயங்கி
இரண்டாவதை ஊக்குவித்து
மூன்றாவதை இயல்பாய்
நான்காவதை உரிமையாய்
ஜந்தாவதை ஆசையோடு
பெற்று, கொடுத்து
களித்து, களைத்து
ஓய்வு பெறும்
உண்மையின் உறைவிடம்
காதலென்றால்
பொய்மையின் மறைவிடம்
முத்தம்
புதிதாய்ப்
பிறக்க வேண்டும்
இனிமையாய்
விளையாட வேண்டும்
யார் கொடுத்து
யார் வாங்க என்ற
குழப்பம் வேண்டும்
பிரிந்திருந்த போது
சேர்த்து வைத்த
முத்தமெல்லாம்
இணையும்போது
சுவைக்கப்படவேண்டும்
இது முத்தத்தின் விதி
Saturday, August 8, 2009
நம் காதலும் தெய்வீகம் தான்!
நிலைவாசல் முட்டி
உன் நெற்றி புடைத்ததில்
மனம் பதறி நான் துடித்து
ஐஸ் ஒத்தடம் கொடுத்து
அன்பாய்த் தடவி
மருந்துகள் இட்டு
கவனித்த நேரத்தில்
உன் கண்களில் பளிச்சிட்ட
பெருமையின் பிரகாசத்தில்...
வருடத்திற்கு ஒரு முறை
சொற்ப விடுமுறையில்
வீட்டை நாடி வந்த
முதல் நாள் பகலில்
காலையிலிருந்து தனியே
கன்னத்தில் கை வைத்து
காத்திருக்கும் அன்புக்குழந்தை
ஆட்டோவைக் கண்டவுடன்
“அப்பா வந்தாச்சு” என
அழைப்புக் குரல் கொடுக்க
அன்றலர்ந்த மலராய்
தலை குளித்து மலர் சூடி
எட்டிப் பார்க்கும்
உன் எதிர்பார்ப்பின் ஆவலில்.....
நீ மும்முரமாய்
சமையல் செய்யும்பொழுது
பின்னிருந்து அணைக்கையில்
வியர்வையின் கசகசப்பில்
மெல்ல நீ நெளிந்தாலும்
முகத்தில் உதிக்கும்
கர்வப் புன்னகையில்.....
கூடல் விரும்பும் செல்களில்
மோகம் கொண்ட நேரத்தில்
நம்மைத் தனியே விடாது
மடிமேல் விளையாடும்
அன்புக் குழந்தையை
விலக்க மனமில்லாமல்
ஆசையை அடக்கிய
அர்த்தம் கொண்ட பார்வையில்...
பிள்ளை வாளி
எடுத்துக் கொடுக்க
மனைவி சலவைத்தூள்
கரைத்துக் கொடுக்க
குடும்பத் தலைவன்
இருசக்கர வண்டி அலச
குடும்பமே இணைந்து செய்யும்
வேலைகளின் பங்கெடுப்பில்....
உன் மீதான என் காதலை
மோகம் முப்பது நாள்
ஆசை அறுபது நாள்
என்ற வரைமுறைக்குள்
சுருக்கி விட முடியுமா?
பிரிந்திருந்தாலும் விலகாது
உறையாத நினைவுளில்
ஒளிந்திருக்கும்
நம் நேசம் சொல்லும்
நம் காதலும்
தெய்வீகமானதென்று
உன் நெற்றி புடைத்ததில்
மனம் பதறி நான் துடித்து
ஐஸ் ஒத்தடம் கொடுத்து
அன்பாய்த் தடவி
மருந்துகள் இட்டு
கவனித்த நேரத்தில்
உன் கண்களில் பளிச்சிட்ட
பெருமையின் பிரகாசத்தில்...
வருடத்திற்கு ஒரு முறை
சொற்ப விடுமுறையில்
வீட்டை நாடி வந்த
முதல் நாள் பகலில்
காலையிலிருந்து தனியே
கன்னத்தில் கை வைத்து
காத்திருக்கும் அன்புக்குழந்தை
ஆட்டோவைக் கண்டவுடன்
“அப்பா வந்தாச்சு” என
அழைப்புக் குரல் கொடுக்க
அன்றலர்ந்த மலராய்
தலை குளித்து மலர் சூடி
எட்டிப் பார்க்கும்
உன் எதிர்பார்ப்பின் ஆவலில்.....
நீ மும்முரமாய்
சமையல் செய்யும்பொழுது
பின்னிருந்து அணைக்கையில்
வியர்வையின் கசகசப்பில்
மெல்ல நீ நெளிந்தாலும்
முகத்தில் உதிக்கும்
கர்வப் புன்னகையில்.....
கூடல் விரும்பும் செல்களில்
மோகம் கொண்ட நேரத்தில்
நம்மைத் தனியே விடாது
மடிமேல் விளையாடும்
அன்புக் குழந்தையை
விலக்க மனமில்லாமல்
ஆசையை அடக்கிய
அர்த்தம் கொண்ட பார்வையில்...
பிள்ளை வாளி
எடுத்துக் கொடுக்க
மனைவி சலவைத்தூள்
கரைத்துக் கொடுக்க
குடும்பத் தலைவன்
இருசக்கர வண்டி அலச
குடும்பமே இணைந்து செய்யும்
வேலைகளின் பங்கெடுப்பில்....
உன் மீதான என் காதலை
மோகம் முப்பது நாள்
ஆசை அறுபது நாள்
என்ற வரைமுறைக்குள்
சுருக்கி விட முடியுமா?
பிரிந்திருந்தாலும் விலகாது
உறையாத நினைவுளில்
ஒளிந்திருக்கும்
நம் நேசம் சொல்லும்
நம் காதலும்
தெய்வீகமானதென்று
Thursday, August 6, 2009
வாழ்க்கை ஓடத்தில் ஆசைத் தோணி
வடம் கட்டி இழுக்க
வீதியிலே தேரசையும்
ஆசை கொண்ட நெஞ்சினில்
வாழ்க்கை பயணிக்கும்
ஸ்வரங்களின் கோர்வையில்
இன்னிசை பிறக்கும்
ஆசைகளின் ஆக்கிரமிப்பில்
வாழ்க்கை சிறக்கும்
காதலில்லாமல்
இவ்வுலகில்லை
ஆசையில்லாமல்
வாழ்க்கையுமில்லை
காலையில் உதித்து விட
சூரியனுக்கு ஆசை
இருள் குவிந்த இரவில்
சந்திரனுக்கு ஆசை
நிஜத்தைத் தொடர
நிழலுக்கு ஆசை
காதலைப் பற்றி விட
இளைஞன் உனக்கு ஆசை
வண்ணக் கனவுகளுடன்
பகல் கனவு கண்டு
காதலியைத் தேடி
குறுஞ்செய்தி அனுப்பி
கடற்கரை சினிமா என
ரெக்கை கட்டிப் பறந்து
காதலை வளர்க்க வேண்டி
ஆசைகளை விதைத்த மனம்
அதிலே பாதியாவது
வாழ்க்கையெனும்
நெடும்பயணத்தில்
உன்னதம் பெற்றிடும்
வழிகளை யோசிக்க
ஆசைப்படக்கூடாதா?
வீதியிலே தேரசையும்
ஆசை கொண்ட நெஞ்சினில்
வாழ்க்கை பயணிக்கும்
ஸ்வரங்களின் கோர்வையில்
இன்னிசை பிறக்கும்
ஆசைகளின் ஆக்கிரமிப்பில்
வாழ்க்கை சிறக்கும்
காதலில்லாமல்
இவ்வுலகில்லை
ஆசையில்லாமல்
வாழ்க்கையுமில்லை
காலையில் உதித்து விட
சூரியனுக்கு ஆசை
இருள் குவிந்த இரவில்
சந்திரனுக்கு ஆசை
நிஜத்தைத் தொடர
நிழலுக்கு ஆசை
காதலைப் பற்றி விட
இளைஞன் உனக்கு ஆசை
வண்ணக் கனவுகளுடன்
பகல் கனவு கண்டு
காதலியைத் தேடி
குறுஞ்செய்தி அனுப்பி
கடற்கரை சினிமா என
ரெக்கை கட்டிப் பறந்து
காதலை வளர்க்க வேண்டி
ஆசைகளை விதைத்த மனம்
அதிலே பாதியாவது
வாழ்க்கையெனும்
நெடும்பயணத்தில்
உன்னதம் பெற்றிடும்
வழிகளை யோசிக்க
ஆசைப்படக்கூடாதா?
Wednesday, August 5, 2009
கொளத்தாங்கரை கும்மி!
அக்காவுக்கு சொகமில்லேன்னு
பச்சப்புள்ளக்கு பசிக்குமேன்னு
அம்மா இங்கே போகச் சொல்ல
பாசத்திலே ஓடியாந்தேன்
துணிமணியைத் தொவைச்சுப்போட
கொளத்தாங்கரைக்கு வந்து சேந்தா
சரசம் பண்ண நினைக்கலாமா
விரசமா நீங்க பேசலாமா
உங்க அண்ணி மட்டும் அம்மாவா
ஒடன் பிறந்தா ரத்தினமா
நம்பி என்னை அனுப்பி வச்சா
மாசமாக்க பாக்கலாமா
அக்கா இருந்தா ராமன் மாறி
குளத்துக்குள்ள கிருஷ்ணன் மாறி
வலையை வீசி கொல்லுறீயளே
வகிந்துருவேன் தள்ளி நில்லும்
தண்ணிய விட்டு வெளியே வந்தா
செதுல எடுத்து சுத்தம் பண்ணி
கொதிக்கிற மீன் கொழம்பில
கொட்டிப்புடுவேன் பாத்துக்கோரும்
உன் உடம்பில் ஒரு பாதியா
உன் உசிரில் சரி பாதியா
பொஞ்சாதி ஒருத்தி இருக்கா
பொன்னாட்டாம் ஜொலிப்போட
அந்தக் காவல் தெய்வம் கண்ணகியை
கண் கலங்க வைக்காதே
ஊரு மேயும் எண்ணத்தை
உடைப்பில் ஓடு என் மச்சான்
பச்சப்புள்ளக்கு பசிக்குமேன்னு
அம்மா இங்கே போகச் சொல்ல
பாசத்திலே ஓடியாந்தேன்
துணிமணியைத் தொவைச்சுப்போட
கொளத்தாங்கரைக்கு வந்து சேந்தா
சரசம் பண்ண நினைக்கலாமா
விரசமா நீங்க பேசலாமா
உங்க அண்ணி மட்டும் அம்மாவா
ஒடன் பிறந்தா ரத்தினமா
நம்பி என்னை அனுப்பி வச்சா
மாசமாக்க பாக்கலாமா
அக்கா இருந்தா ராமன் மாறி
குளத்துக்குள்ள கிருஷ்ணன் மாறி
வலையை வீசி கொல்லுறீயளே
வகிந்துருவேன் தள்ளி நில்லும்
தண்ணிய விட்டு வெளியே வந்தா
செதுல எடுத்து சுத்தம் பண்ணி
கொதிக்கிற மீன் கொழம்பில
கொட்டிப்புடுவேன் பாத்துக்கோரும்
உன் உடம்பில் ஒரு பாதியா
உன் உசிரில் சரி பாதியா
பொஞ்சாதி ஒருத்தி இருக்கா
பொன்னாட்டாம் ஜொலிப்போட
அந்தக் காவல் தெய்வம் கண்ணகியை
கண் கலங்க வைக்காதே
ஊரு மேயும் எண்ணத்தை
உடைப்பில் ஓடு என் மச்சான்
Monday, August 3, 2009
நீயும் மனிதனாகு!
உன் ஒவ்வொரு வார்த்தைக்கும்
ஒரு பிரதிபலிப்பு இருப்பது
உனக்குத் தெரியுமா ?
வஞ்சம் மிகுந்த வார்த்தைகள்
அம்பெனப் பாய்ந்து தாக்குவது
உனக்கு ஏன் புரியவில்லை ?
ஏளனச் சிரிப்பு காட்டி
ஏன் என் உள்ளக் குமுறலில்
குளிர் காய நினைக்கிறாய் ?
உன்னால் மட்டும் தான்
என்னைக் காக்க முடியுமா ?
இது போலியான பாதுகாப்பென்று
உனக்குத் தெரியவில்லையா ?
உண்மை நெருப்பாக சுட
ஒரு நாள் நீ தப்பித்து
ஓடத்தான் போகிறாய்!
இனி உன் வார்த்தைகள்
என் இதயத்தில்
காயம் உண்டாக்காது
இரும்பு மனம் கொண்ட
உன் இருமாப்பு
எனை ஒன்றும் செய்யாது
அர்த்தமின்றி வரும் வார்த்தைகள்
வந்த வேகத்திலேயே
இனி சத்தமின்றி விலகிப்போகும்
தவறான புரிதல் கொண்டு
பகட்டான வார்த்தை சொல்லி
பொறி வைத்து பிடித்திட
நான் என்ன சுண்டெலியா ?
உன் தோல்வியைத் தவிர்க்க
என்னை நீ சாடினால்
நான் உணவை மறந்து
தூக்கம் இழந்து
அல்லல் படுவேன்
என நினைத்தாயோ ?
ஏ சுயநல மனித மனமே!
இதில் இருந்து தப்பிக்க
விழி திறந்து வழி தேடு
எள்ளி நகையாடும்
உன் ஏளனத்தை விடுத்து
எளிமையை நீ நாடு
ஆத்திரம் கொண்ட
உன் அகம்பாவத்தை விடுத்து
அமைதி வழி தேடு
பொய்யென்னும் போர்வைக்குள்
சுருண்டு படுத்து ஒளியாமல்
நேர்மையில் கரைந்து விடு
அன்பாலே ஆட்கொண்டு
மனக் கதவைத் திறந்துவிட்டு
குற்ற உணர்வை நீக்கு!
நீயும் மனிதனாகு!
ஒரு பிரதிபலிப்பு இருப்பது
உனக்குத் தெரியுமா ?
வஞ்சம் மிகுந்த வார்த்தைகள்
அம்பெனப் பாய்ந்து தாக்குவது
உனக்கு ஏன் புரியவில்லை ?
ஏளனச் சிரிப்பு காட்டி
ஏன் என் உள்ளக் குமுறலில்
குளிர் காய நினைக்கிறாய் ?
உன்னால் மட்டும் தான்
என்னைக் காக்க முடியுமா ?
இது போலியான பாதுகாப்பென்று
உனக்குத் தெரியவில்லையா ?
உண்மை நெருப்பாக சுட
ஒரு நாள் நீ தப்பித்து
ஓடத்தான் போகிறாய்!
இனி உன் வார்த்தைகள்
என் இதயத்தில்
காயம் உண்டாக்காது
இரும்பு மனம் கொண்ட
உன் இருமாப்பு
எனை ஒன்றும் செய்யாது
அர்த்தமின்றி வரும் வார்த்தைகள்
வந்த வேகத்திலேயே
இனி சத்தமின்றி விலகிப்போகும்
தவறான புரிதல் கொண்டு
பகட்டான வார்த்தை சொல்லி
பொறி வைத்து பிடித்திட
நான் என்ன சுண்டெலியா ?
உன் தோல்வியைத் தவிர்க்க
என்னை நீ சாடினால்
நான் உணவை மறந்து
தூக்கம் இழந்து
அல்லல் படுவேன்
என நினைத்தாயோ ?
ஏ சுயநல மனித மனமே!
இதில் இருந்து தப்பிக்க
விழி திறந்து வழி தேடு
எள்ளி நகையாடும்
உன் ஏளனத்தை விடுத்து
எளிமையை நீ நாடு
ஆத்திரம் கொண்ட
உன் அகம்பாவத்தை விடுத்து
அமைதி வழி தேடு
பொய்யென்னும் போர்வைக்குள்
சுருண்டு படுத்து ஒளியாமல்
நேர்மையில் கரைந்து விடு
அன்பாலே ஆட்கொண்டு
மனக் கதவைத் திறந்துவிட்டு
குற்ற உணர்வை நீக்கு!
நீயும் மனிதனாகு!
Sunday, August 2, 2009
காதலின் பாதை
இன்று நேற்றா
உன்னை விரும்புகிறேன்
பல வருடங்களுக்கு முன்
மத்தாப்பின் ஒளியில்
மலர்ந்திருந்த வதனத்தைப்
பார்த்ததிலிருந்தே
நான் தொலைந்திருந்தேன்
நீயும் தான் எனை விரும்புகிறாய்
என் வருகையை எதிர்பார்க்கிறாய்
வராத போது துவண்டு விடுகிறாய்
ஆனால்,
காதலை மட்டும்
சொல்வதே இல்லை
கேட்டால்,
”என் இதயத்தோடு ஏன் விளையாடிகிறீர்கள்”
என்கிறாய்
இந்த சொல் மட்டும்
தாங்க முடியவில்லை கண்னே
களைத்தே போனேன் நான்
இந்த விளையாட்டில்
என் முகத்தை பார்த்து
தெரிந்து கொள்ள முடியாதா
நான் உண்மையானவன் என்று
சுயநலமாக என்னை மட்டும்
குற்றம் சொல்கிறாய்
உனக்கு காதலின் மேல் பயம்
எங்கு சென்றாலும்
எங்கு மறைந்தாலும்
நாம் இருவரும் ஒன்றென்பதை
ஏன் மறுக்கிறாய்
மாயைகளிலிருந்து தப்பித்து
காதலில் பொறுப்பேற்று
என்னுடன் சேர்ந்து வா
ஈருடல் ஓருயிராய்
செல்வோம் இனி காதலின் பாதை
உன்னை விரும்புகிறேன்
பல வருடங்களுக்கு முன்
மத்தாப்பின் ஒளியில்
மலர்ந்திருந்த வதனத்தைப்
பார்த்ததிலிருந்தே
நான் தொலைந்திருந்தேன்
நீயும் தான் எனை விரும்புகிறாய்
என் வருகையை எதிர்பார்க்கிறாய்
வராத போது துவண்டு விடுகிறாய்
ஆனால்,
காதலை மட்டும்
சொல்வதே இல்லை
கேட்டால்,
”என் இதயத்தோடு ஏன் விளையாடிகிறீர்கள்”
என்கிறாய்
இந்த சொல் மட்டும்
தாங்க முடியவில்லை கண்னே
களைத்தே போனேன் நான்
இந்த விளையாட்டில்
என் முகத்தை பார்த்து
தெரிந்து கொள்ள முடியாதா
நான் உண்மையானவன் என்று
சுயநலமாக என்னை மட்டும்
குற்றம் சொல்கிறாய்
உனக்கு காதலின் மேல் பயம்
எங்கு சென்றாலும்
எங்கு மறைந்தாலும்
நாம் இருவரும் ஒன்றென்பதை
ஏன் மறுக்கிறாய்
மாயைகளிலிருந்து தப்பித்து
காதலில் பொறுப்பேற்று
என்னுடன் சேர்ந்து வா
ஈருடல் ஓருயிராய்
செல்வோம் இனி காதலின் பாதை
Saturday, August 1, 2009
முத்தமும் இன்பத்தீயும்
உன்னையே நினைத்திருந்தேன்
உன் ஒவ்வொரு அசைவையும்
கவனித்திருந்தேன்
உன் அன்புக் கரங்களால் எனை அணைத்தாய்
எனக்குள் காதல் காய்ச்சல் தோன்றியதடி
நான் சொல்வதை இன்று
கண்மூடிக் கொஞ்சம் கேள்
என்னைப்போல் உன்னை
யாராலும் நேசிக்க முடியாது
ஏனென்றால்
நான் நேசிக்கும் அழகைப் போல்
யாராலும் உனை நேசிக்க முடியாது
பகலுக்காக சூரியன் ஒளிர்கிறது
இரவுக்காக சந்திரன் ஒளிர்கிறது
என் கண்கள் மட்டும்
நீ என் பெயரை உச்சரிக்கும்பொழுது
பிரகாசமாய் ஒளிர்கிறது
என் இதயத்தை எடுத்துக்கொண்டு
கிறங்க வைக்கும் உன் முத்தத்தால்
உன்னைக் காதலிக்கும் என்
ஆன்மாவை ஆசீர்வாதம் செய்!
இந்தக் காதல் காய்ச்சல்
புதிதல்ல அன்பே
ஆதாம் ஏவாளை
அணைத்த பொழுது
பற்றியெரிந்த அதே தீ தான்
கொதிக்கும் அதே காய்ச்சல் தான்
இப்போது எனக்கும்
நீ இறுக என்னை
அணைக்கும்போது
உன் இதழ்களை ஒற்றி
முத்தமிடும்போது
தோன்றும் இந்த காய்ச்சலை
அனுபவிக்க வேண்டுமடி!
போதை தரும் இந்த காய்ச்சலோடு
காதல் காய்ச்சலில்,
தகிக்கும் உடம்பு சூட்டில்,
உன் நினைவுகளில் புலம்ப,
இப்படி ஒரு இனிமையான வழியா???
உன் ஒவ்வொரு அசைவையும்
கவனித்திருந்தேன்
உன் அன்புக் கரங்களால் எனை அணைத்தாய்
எனக்குள் காதல் காய்ச்சல் தோன்றியதடி
நான் சொல்வதை இன்று
கண்மூடிக் கொஞ்சம் கேள்
என்னைப்போல் உன்னை
யாராலும் நேசிக்க முடியாது
ஏனென்றால்
நான் நேசிக்கும் அழகைப் போல்
யாராலும் உனை நேசிக்க முடியாது
பகலுக்காக சூரியன் ஒளிர்கிறது
இரவுக்காக சந்திரன் ஒளிர்கிறது
என் கண்கள் மட்டும்
நீ என் பெயரை உச்சரிக்கும்பொழுது
பிரகாசமாய் ஒளிர்கிறது
என் இதயத்தை எடுத்துக்கொண்டு
கிறங்க வைக்கும் உன் முத்தத்தால்
உன்னைக் காதலிக்கும் என்
ஆன்மாவை ஆசீர்வாதம் செய்!
இந்தக் காதல் காய்ச்சல்
புதிதல்ல அன்பே
ஆதாம் ஏவாளை
அணைத்த பொழுது
பற்றியெரிந்த அதே தீ தான்
கொதிக்கும் அதே காய்ச்சல் தான்
இப்போது எனக்கும்
நீ இறுக என்னை
அணைக்கும்போது
உன் இதழ்களை ஒற்றி
முத்தமிடும்போது
தோன்றும் இந்த காய்ச்சலை
அனுபவிக்க வேண்டுமடி!
போதை தரும் இந்த காய்ச்சலோடு
காதல் காய்ச்சலில்,
தகிக்கும் உடம்பு சூட்டில்,
உன் நினைவுகளில் புலம்ப,
இப்படி ஒரு இனிமையான வழியா???
Thursday, July 30, 2009
யாதுமாகி நின்றாய்!
குமரியாய் என் கண்களில் விழுந்து
இன்று அன்னையாய் ஆதரிக்கிறாய்
விழிகளுக்கு விருந்து தந்து
இன்று உயிருக்கு உரமாகிறாய்
பூவுக்குள் நிலவாய்ப் பூத்திட்டாய்
பளிச்சிடும் கதிர்களாய் மின்னினாய்
பார்வையாலே கேள்வி கேட்டாய்
கண்ணசைவைப் புரிந்து கொண்டாய்
மடியினில் குழந்தையாக்கினாய்
உழைப்பின் களைப்பை விரட்டினாய்
தோழியாய் உருகினாய்
மின்னலாய் என் உயிர் தேடி
முகம் புதைத்து மருகினாய்
ஆசையாய் ஆடை அணிந்து
தென்றலாய் மெல்ல விரிந்து
பனியாய் காதல் பொழிந்து
தேனாய் இதழ் விரித்து
இரவினிலே எனை வென்றாய்
சோர்ந்திருந்த சமயத்தில்
அமுதமாய் வீரம் பேசினாய்
விடியலாய் வந்து
நம்பிக்கை தந்தாய்
இழந்திருந்த உயிரை
எனக்கு மீட்டித் தந்தாய்
”யாதுமாகி நின்றாய்”
என்ற வார்த்தைகளின்
அர்த்தத்தை எனக்கு
இன்று புரிய வைத்தாய்!
இன்று அன்னையாய் ஆதரிக்கிறாய்
விழிகளுக்கு விருந்து தந்து
இன்று உயிருக்கு உரமாகிறாய்
பூவுக்குள் நிலவாய்ப் பூத்திட்டாய்
பளிச்சிடும் கதிர்களாய் மின்னினாய்
பார்வையாலே கேள்வி கேட்டாய்
கண்ணசைவைப் புரிந்து கொண்டாய்
மடியினில் குழந்தையாக்கினாய்
உழைப்பின் களைப்பை விரட்டினாய்
தோழியாய் உருகினாய்
மின்னலாய் என் உயிர் தேடி
முகம் புதைத்து மருகினாய்
ஆசையாய் ஆடை அணிந்து
தென்றலாய் மெல்ல விரிந்து
பனியாய் காதல் பொழிந்து
தேனாய் இதழ் விரித்து
இரவினிலே எனை வென்றாய்
சோர்ந்திருந்த சமயத்தில்
அமுதமாய் வீரம் பேசினாய்
விடியலாய் வந்து
நம்பிக்கை தந்தாய்
இழந்திருந்த உயிரை
எனக்கு மீட்டித் தந்தாய்
”யாதுமாகி நின்றாய்”
என்ற வார்த்தைகளின்
அர்த்தத்தை எனக்கு
இன்று புரிய வைத்தாய்!
Wednesday, July 29, 2009
மழை என் நாயகன்
காத்திருந்து காத்திருந்து
இன்று வந்த
முதல் மழையே
நீயும் என் நாயகன் போல்
இனிய இம்சையாகிறாய்
துறுதுறுப்பாய் சிறகடிக்கும் அவன்
சிறு தூறலாய் தூவிடும் நீ
அன்பால் உள்ளம் நனைக்கும் அவன்
ஆசையாய் உடல் நனைக்கும் நீ
காதல் வாசனையோடு அவன்
மண் வாசனையோடு நீ
புயலாய் அவன் அணைத்திட
என் உடல் சிதறும்
உரிமையாய் நீ தெரித்திட
என் மேனி நடுங்கும்
சில சமயம் சிறு மழையாய்
அவன் அன்பு அழைப்பு
சில சமயம் தொடர் மழையாய்
அவன் ஆசைப் பிடிவாதம்
அவன் நேசத்தில் எனை மறந்து
மேகமாய் மிதக்கும் நெஞ்சம்
உன் பொழிவில் உள்ளம் குளிர்ந்து
மயிலிறகாகும் என் இதயம்
எப்போதோ வருவதும்
சீராகப் பரவுவதும்
மின்னலாய் உடலில் புகுவதும்
இடியாய் அதிர்வைத் தருவதும்
புயலாய் என்னைத் தழுவுவதும்
விழிகளைச் சிறை பிடிப்பதும்
பகல் இரவை மறக்கடிப்பதும்
இன்னும் இன்னும் இன்னும்
என் நாயகனின் குணங்களாய்
என்னைத் தடம் புரளச் செய்யும்
என் அன்பு மழையை
இடைவிடாது ரசிக்கின்றேன்!
இன்று வந்த
முதல் மழையே
நீயும் என் நாயகன் போல்
இனிய இம்சையாகிறாய்
துறுதுறுப்பாய் சிறகடிக்கும் அவன்
சிறு தூறலாய் தூவிடும் நீ
அன்பால் உள்ளம் நனைக்கும் அவன்
ஆசையாய் உடல் நனைக்கும் நீ
காதல் வாசனையோடு அவன்
மண் வாசனையோடு நீ
புயலாய் அவன் அணைத்திட
என் உடல் சிதறும்
உரிமையாய் நீ தெரித்திட
என் மேனி நடுங்கும்
சில சமயம் சிறு மழையாய்
அவன் அன்பு அழைப்பு
சில சமயம் தொடர் மழையாய்
அவன் ஆசைப் பிடிவாதம்
அவன் நேசத்தில் எனை மறந்து
மேகமாய் மிதக்கும் நெஞ்சம்
உன் பொழிவில் உள்ளம் குளிர்ந்து
மயிலிறகாகும் என் இதயம்
எப்போதோ வருவதும்
சீராகப் பரவுவதும்
மின்னலாய் உடலில் புகுவதும்
இடியாய் அதிர்வைத் தருவதும்
புயலாய் என்னைத் தழுவுவதும்
விழிகளைச் சிறை பிடிப்பதும்
பகல் இரவை மறக்கடிப்பதும்
இன்னும் இன்னும் இன்னும்
என் நாயகனின் குணங்களாய்
என்னைத் தடம் புரளச் செய்யும்
என் அன்பு மழையை
இடைவிடாது ரசிக்கின்றேன்!
Tuesday, July 28, 2009
மழை என் காதலன்
கன்னத்தோடு சந்தனம் இட்டு
காதோடு காதல் பேசி
நெஞ்சினிலே சிம்மாசனம் இட்டு
என்னை இயக்கும்
வானமும் பூமியுமாகி
தென்றலைப் போல்
எனை உரசிச் செல்லும்
என் செல்ல மழையே
உன் காதல் சேட்டையில்
வெட்கப்பட்டு நிறம் மாறிய
என் முகம் கண்டு
தலையில் சூடிய மல்லிகையும்
சிகப்பு ரோஜாவாய் ஆனது..............
காதோடு காதல் பேசி
நெஞ்சினிலே சிம்மாசனம் இட்டு
என்னை இயக்கும்
வானமும் பூமியுமாகி
தென்றலைப் போல்
எனை உரசிச் செல்லும்
என் செல்ல மழையே
உன் காதல் சேட்டையில்
வெட்கப்பட்டு நிறம் மாறிய
என் முகம் கண்டு
தலையில் சூடிய மல்லிகையும்
சிகப்பு ரோஜாவாய் ஆனது..............
Sunday, July 26, 2009
ஆசை கொண்ட நெஞ்சினாய் வா...வா..வா.
நல்லதே நினைக்க
நல்லதே நடக்கும்
நல்லதே நடக்க
நல்லதே நினைக்கணும்
வண்ணமயமான எண்ணங்கள்
வானவில்லின் நேர்த்தியோடு
மழையைப் போன்ற குணத்தோடு
நெஞ்சில் ஆழமாய் உதித்திடணும்
வானத்தை மறைத்திட்ட
மேகமும் இல்லை
நல் எண்ணத்தை மறைத்திட்ட
மனமும் இல்லை
வானில் சூரியன் மறைந்து
சந்திரனின் ஒளி பரவும்
உன் மனதிலும்
ஆசையும் வெறுப்பும்
கோபமும் தாபமும்
மாறி வரும்
ஆனால்
கொண்ட எண்ணங்கள்
நிலைத்திட நீயும்
கொஞ்சம் உரமூட்டணும்
எண்ணங்களைக் கனவா காணணும்
நினைவிலும் அதையே வளர்க்கணும்
படமாய்க் கண்ணாடியில் ஒட்டி
காலையில் அதன்மேல் விழிக்கணும்
புடம் போட்ட தங்கமாய்
உன்னுள் எண்ணங்கள் ஜொலிக்கணும்
பின்
வலிமை பெற்ற எண்ணம்
வழியைத் தேடிப் போகணும்
வழியெங்கும் ஆதரவு திரட்டி
குறிக்கோளை அடைந்தே தீரணும்
நல்லதே நடக்கும்
நல்லதே நடக்க
நல்லதே நினைக்கணும்
வண்ணமயமான எண்ணங்கள்
வானவில்லின் நேர்த்தியோடு
மழையைப் போன்ற குணத்தோடு
நெஞ்சில் ஆழமாய் உதித்திடணும்
வானத்தை மறைத்திட்ட
மேகமும் இல்லை
நல் எண்ணத்தை மறைத்திட்ட
மனமும் இல்லை
வானில் சூரியன் மறைந்து
சந்திரனின் ஒளி பரவும்
உன் மனதிலும்
ஆசையும் வெறுப்பும்
கோபமும் தாபமும்
மாறி வரும்
ஆனால்
கொண்ட எண்ணங்கள்
நிலைத்திட நீயும்
கொஞ்சம் உரமூட்டணும்
எண்ணங்களைக் கனவா காணணும்
நினைவிலும் அதையே வளர்க்கணும்
படமாய்க் கண்ணாடியில் ஒட்டி
காலையில் அதன்மேல் விழிக்கணும்
புடம் போட்ட தங்கமாய்
உன்னுள் எண்ணங்கள் ஜொலிக்கணும்
பின்
வலிமை பெற்ற எண்ணம்
வழியைத் தேடிப் போகணும்
வழியெங்கும் ஆதரவு திரட்டி
குறிக்கோளை அடைந்தே தீரணும்
Saturday, July 25, 2009
மௌனப் புயலாய் நீ....
நீங்காமல் இருக்கிறாய்
நிழலைப் போல!
இதமாக அணைக்கிறாய்
இமையைப் போல!
கலையாத கனவாக
நித்தம் வதைக்கிறாய்!
நினைவின் விளிம்பு வரை
ஊடுருவிச் செல்கிறாய்!
பூவாக மலர்கிறாய்!
இதழ் மூடி சிரிக்கிறாய்!
சூழலாகப் படிகிறாய்!
நோகாமல் தேடுகிறாய்!
இதழ்கள் குவித்து
புருவங்கள் நெரித்து
கண்கள் பனித்து
வாயசைக்காமல்
முணுமுணுத்து
புன்னகையோடு
செவிமடுத்து....
நினைவுகளை உயிர்ப்பிக்கும்
வலிகளை லேசாக்கும்
தனிமையை சுகமாக்கும்
ஏக்களை எளிதாக்கும்
கனவை உயிராக்கும்
மௌனப்புயலே உன்னில் நான்
தொலைந்து போகிறேன்!
நிழலைப் போல!
இதமாக அணைக்கிறாய்
இமையைப் போல!
கலையாத கனவாக
நித்தம் வதைக்கிறாய்!
நினைவின் விளிம்பு வரை
ஊடுருவிச் செல்கிறாய்!
பூவாக மலர்கிறாய்!
இதழ் மூடி சிரிக்கிறாய்!
சூழலாகப் படிகிறாய்!
நோகாமல் தேடுகிறாய்!
இதழ்கள் குவித்து
புருவங்கள் நெரித்து
கண்கள் பனித்து
வாயசைக்காமல்
முணுமுணுத்து
புன்னகையோடு
செவிமடுத்து....
நினைவுகளை உயிர்ப்பிக்கும்
வலிகளை லேசாக்கும்
தனிமையை சுகமாக்கும்
ஏக்களை எளிதாக்கும்
கனவை உயிராக்கும்
மௌனப்புயலே உன்னில் நான்
தொலைந்து போகிறேன்!
Friday, July 24, 2009
மக்கிப்போகா நினைவுகள்!
மரத்தின் இலைகள் பசுமையாய்
செழித்து வளர்வது
அது உதிரும் வரை.....
மின் விசிறி போல் சுழற்றும்
நினைவுகளின் தாக்கங்கள்
இந்த வாழ்க்கை வரை......
மரத்தின் நிழல் குடையாக
அதன் கீழே மட்டும்......
மனிதனின் நிழல் அரணாக
செல்லும் இடமெல்லாம்......
மரங்களையும் தாண்டி
மனிதனையும் தாண்டி
இந்த இயற்கைச் சூழல்
புவி இருக்கும் வரை.....
இயற்கையின் இந்த
எழில்மிகு ஆக்கிரமிப்பை
நீ ஏன் கெடுக்க நினைக்கிறாய்?
மனிதநேயத்தை மறந்தாற்போல்
மகத்தான இந்த பூமியையும்
மாசு பட விடுவாயோ?
மக்கி விட
வருடங்கள் 600 ஆகுமாமே
மழை வளம்
மெல்ல இனிக் குறையுமாமே
ஓங்க வேண்டும் இந்த பூமியென்றால்
ஒழிக்கலாமே நாமும் பிளாஸ்டிக்கை!
மழைநீர் நிலத்துக்குள் செல்வதில்லையாம்
மண்ணுக்குள் காற்று கூட புக முடியாதாம்
மண்ணின் பிடிமானம் தகர்கிறதாம்
மண்சரிவும் இதனால்தான் நிகழ்கிறதாம்
எடுப்புச் சாப்பாடை இதை வைத்து சுற்றினால்
நஞ்செல்லாம் உணவோடு கலந்திடுதாம்
கழிவுகளை அகற்ற அதை எரித்தால்
காற்றோடு “டையாக்சின்” கலக்கிறதாம்
சுவாசித்தால் புற்று நோய் பிறக்கிறதாம்
சபரிமலை ஐயப்பனின் யானை மான்கள்
சப்தமினிறிப் பலியானதாம் இதைத் தின்று
மிச்சங்களை கடலில் கொட்டிய அமெரிக்காவில்
மடிந்தனவாம் அற்புத சீல்கள் ஆயிரமாயிரம்
எல்லாம் அறிந்த பெரியண்ணன் அமெரிக்காவிடம்
மறு உற்பத்தியாய் நாம் வாங்கும் இக்கழிவால்
இரட்டிப்பானதாம் இதன் கேடுகள் நம் நாட்டில்
தேவையில்லா பிளாஸ்டிக்கை வாங்கவே வேண்டாம் (Refuse)
வழியில்லை எனும் நிலையில் குறைத்துக் கொள்வோம் (Reduce)
முடிந்தவரை மறுபடியும் மறுபடியும் உபயோகிப்போம் (Reuse)
வீசி எறியும் முன் இன்னொரு முறை யோசிப்போம் (Retain)
இயற்கைக்கு இணக்கமாய் பிரித்தெடுப்போம் (Recycle)
மாற்று ஒன்று இப்புவியில் கண்டறியும் வரை
மறக்காமல் செயல்படுத்துவோம் இவ்வைந்தை!
==============================

=====
கீழே படித்த கட்டுரையின் தாக்கம் மேலே கவிதையாய் உங்கள் பார்வைக்கு
===================================
இன்று நமது அன்றாடப் பயன்பாட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிக செல்வாக்குப் பெற்றுள்ளன. இன்னொருபுறம் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
மறுபயன்பாடற்ற பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு பெருங்கேடு ஏற்பட்டு வருகிறதென சுற்றுச்சூழலியளாளர்கள் கருத்து தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில் தமிழக அரசு அதிரடி நடவடிக்கையாக பிளாஸ்டிக் பொருட்களை விற்பதையும் பயன்படுத்துவதையும் தடை செய்யும் சட்டமசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது.
பிளாஸ்டிக் பொருள்கள் தடைசட்டத்தை மீறுவோர் மீது ரூ.100 லிருந்து ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்க இம்மசோதா வகை செய்கிறது. இச்சட்ட மசோதாவை சிலர் அறிமுக நிலையிலேயே எதிர்த்தனர்.
மாற்றுநடைமுறை எதுவும் உருவாக்காமல் பிளாஸ்டிக் தடை மசோதா கொண்டு வருவது கண்டிக்கத்தக்கதென எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்தன.
பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடுகளால் சுற்றுச்சூழலுக்கு பெருங்கேடு ஏற்படுகிறது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. சுற்றுச்சூழலுக்கு பிளாஸ்டிக்கால் பெரும் அபாயம் ஏற்பட்டுள்ளதை பலரும் அறிவுபூர்வமாகவே சுட்டிக்காட்டுகின்றனர்.
இரும்பு, உலோகம் பயன்பாட்டை ஓரங்கட்டி பிளாஸ்டிக் பொருள்கள் எங்கும் எதிலும் ஆக்கிரமிப்பு செய்யத் தொடங்கிவிட்டது. கற்காலம், இரும்புக்காலம் என்பது போல் பிளாஸ்டிக் காலம் எனும் நிலை உருவாகிவிட்டது.
இன்று பிளாஸ்டிக் தொழில்நுட்பம் உலகளாவிய கவனத்தை ஈர்க்கத் தொடங்கிவிட்டது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் இப்போக்கு மேலும் அதிகரித்தது. போரில் ஜப்பானின் நுழைவுடன் தூரகிழக்கு நாடுகளில் இருந்துகிடைத்து வந்த ரப்பரின் வரவு தடைபட்டுப் போக, மேற்குலக விஞ்ஞானிகளின் பார்வை பிளாஸ்டிக் மீது திரும்பியது. ரப்பருக்குப் பதிலாக பிளாஸ்டிக்கை ஆயுத உற்பத்தியில் பயன்படுத்த ஆரம்பித்தனர்.
பிளாஸ்டிக் தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருட்கள் எளிதில் கிடைக்கக்கூடியவை. அதாவது பெரும்பாலான பிளாஸ்டிக் வகைகள் தவாரப் பொருட்களான ரெசின்களிலிருந்தும், பெட்ரோலியப் பொருட்களிலிருந்தும் தயாரிக்கப் படுகின்றன. இந்நிலையில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு மேலும் அதிகமாகத் தொடங்கியது. பிளாஸ்டிக் இலேசானது, தண்ணீரில் கரையாது, துருப் பிடிக்காது, மட்கிப் போகாது போன்ற காரணங் களால் பிளாஸ்டிக் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. உலோகங்கள் மரச்சாமான்கள் என்று உபயோகத்தில் இருந்த எல்லாவற்றையும் ஓரங்கட்டிவிட்டு இப்போது முழு உலகையும் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துவிட்டது ப்ளாஸ்டிக்.
இந்தியாவில் 1990இல் புதிய பொருளாதாரக் கொள்கை காரணமாக பல்வேறு பொருட்கள் மீதான சுங்க வரிகள் தளர்த்தப்பட்டன. இதனால் புதிய தொழில்நிறுவனங்கள் பரவலாயின. மேலும் குறைந்த விலையில் பிளாஸ்டிக்கை உருவாக்கி மக்களிடையே அதிக நுகர்ச்சியை உண்டாக்கும் வாயப்புகள் அதிகரித்தன. இதனால் பல நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை விட அதிகம் லாபத்தை ஈட்டத் தொடங்கின.
இதனால் பல சிறிய நிறுவனங்கள் பெரிய நிறுவனத்தை எதிர்த்து வணிகம் செய்ய முடியாமல் தனது நிறுவனங்களை மூடிவிட்டன. மறுபுறம் குறைந்த விலையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு கிடைப்பதால் சணல், மூங்கில், மரம் போன்றவற்றைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பொருட்கள் இன்று காணாமல் போய்விட்டன. அதாவது அவை வணிகத்தை இழந்துவிட்டன.
சணல் தொழில்: 1970 இல் இந்தியாவின் அந்நிய செலாவணியில் குறைந்தது 30% வருவாயைச் சணல் தொழில் பெற்றுத் தந்தது. இன்றோ அது 1% ஆகக் குறைந்து விட்டது. சொல்லப்போனால் அத்தொழில் செத்தேவிட்டது. சணலுக்கு மாற்றாக பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பால் இந்த சரிவு எற்பட்டது.
தோல் தொழில்: நம் காலணிகளுக்கு மூலமான பொருளாக தோல் விளங்கியது. இன்று பி.வி.சி - இன் அறிமுகத்திற்கு அடுத்து தோல்களின் பயன்பாடும் இறங்குமுகமாக உள்ளது.
அதே போன்று மரப்பொருட்களை எடுத்துக் கொண்டாலும் அதிலும் பிளாஸ்டிக்கின் பயன்பாடு காரணமாக அத்தொழிலும் நசிந்து வருகிறது.
ஆக பிளாஸ்டிக்கின் இந்த ஏகபோக வளர்ச்சி சத்தமில்லாமலேயே பூமியை சாகடித்துக் கொண்டிருக்கிறது. இதன் கோரமுகத்தை உலகம் இன்று நன்கு உணரத் தொடங்கியுள்ளது.
மண்ணோடு மண்ணாக மட்கிப் போகாத, தன்மைதான் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தனி மவுசைக் கொடுத்தது. ஆனால் அதே உறுதித்தன்மைதான் சுற்றுச்சுழலின் பிரதான எதிரியாகிவிட்டது. மண்ணில் உள்ள பாக்டீரியா - பூஞ்சைக் காளான்கள் போன்ற நுண்ணு யிரிகளின் செயல்பாட்டினால் பொருட்கள் சிதைந்து அழிவதை விஞ்ஞானிகள் உயிர்மச்சிதைவு என்று பெயரிட்டிருக்கிறார்கள். வீட்டுக் கழிவுகள், பண்ணைக் கழிவுகள், மரச்சாமான்கள் எல்லாம் இப்படித்தான் மண்ணுடன் கரைந்து இயற்கைச் சூழற்சியில் பங்கேற்கின்றன.
உலோகப் பொருட்கள்கூட வேதிமாற்றங்களினால் துரு ஏறி காலப்போக்கில் அழிந்து போய்விடுகின்றன. ஆனால் பிளாஸ்டிக் மட்டும் மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாகக்கூட வாழும் வரத்தை மனிதர்களிடம் வாங்கி வைத்திருக்கிறது.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகம். அந்தப் பொருட்களை ஒருமுறை பயன்படுத்தி விட்டு வீசும் நுகர்வுக் கலாசாரத்தில் உள்ளோம். தண்ணீர், பால் அடைத்துவரும் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் தேனீர், குவளைகள் போன்றன மலைபோல் குவிகின்றன. இவை சுற்றுச்சுழலின் அழகை கெடுக்கின்றன என்பது ஒருபுறம். ஆனால் இவற்றுக்கு அப்பால் இந்தப் பிளாஸ்டிக் பொருட்கள் மட்கி சிதையாமல் மண்ணில் மேலும் கீழும் காலங்காலமாகக் கிடக்கின்றன. இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் அதிகம்.
பிளாஸ்டிக் கழிவுகள் மழைநீரை நிலத்தினுள் நுழைய அனுமதிப்பதேயில்லை. ஏற்கெனவே காடுகளை அழித்தல் பச்சைவீட்டு வளைவு போன்ற சீர்கேடுகளால் நா வறண்டு போயிருக்கும் பூமியின் மிச்சசொச்ச நிலத்தடி நீரையும் மேலும் பற்றாக்குறையாக்குகிறது. தண்ணீரை மட்டுமல்ல; மண்ணுக்குள் காற்று புகுவதைக்கூட தடுக்கிறது.
காற்றில்லாத சூழல் மண்ணுக்குக் கீழே கண்ணுக்குத் தெரியாமல் இயங்கிக் கொண்டிருக்கும் நுண்ணுயிர்களின் உலகத்தை வெகுவாகப் பாதிக்கிறது. இதனால் உயிர்மச் சிதைவின்றிப் பொருட்களின் சுழற்சி தடைப்பட்டுப் போய்விடுகிறது. இது தாவரங்களின் வளர்ச்சியை மோசமாகப் பாதிக்கிறது. இதைவிட பிளாஸ்டிக் கழிவுகளின் கீழ் சிக்கி முளை கொள்ள முடியாமல் தவிக்கும் விதைகளின் அவஸ்தை அது வேறு தனி. தரைக்குக் கீழே புதையுண்டு கிடக்கும் பிளாஸ்டிக், மண்ணின் பிடிமானத்தை தளர்த்தி மலைப்பகுதிகளில் அவ்வவ்போது பெரும்மண் சரிவையும் ஏற்படுத்தி விடுகிறது. இவ்வாறு சுற்றுச்சூழலியலாளர்கள் பிளாஸ்டிக்கால் ஏற்படும் பிரச்சனைகளை பட்டியிலிடுகின்றனர்.
மருத்துவ விஞ்ஞானிகள்கூட பிளாஸ்டிக் ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை தம் பங்குக்கு எச்சரிக்கை செய்கின்றனர். சில வகையான பிளாஸ்டிக் தாளினால் உணவுப் பொருட்களை சுற்றும்போது பிளாஸ்டிக்கிலுள்ள நச்சுப் பொருட்கள் கொஞ்சம் கொஞ்சமாக உணவுடன் கலந்து விடுவதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றன.
பொதுவாக உணவில் பிளாஸ்டிக் நஞ்சு கலக்கும்போது தலைசுற்றல், வாந்தி பேதி, குடல்புண், நரம்புத் தளர்ச்சி தொடங்கி ஆண்மை இழப்பு, புற்றுநோய்கள், குழந்தைப் பிறப்பு பாதிப்புகள், தோல் நோய்கள், மூச்சுக் குழாயைத் தாக்கும் கடுமையான நோய், குடல்புண், செரியாமை, நரப்புத் தளர்ச்சி மற்றும் குருதி, சிறுநீரகம் உடலின் எதிர்ப்பு ஆற்றலைக் குறைத்தல் என இதன் பாதிப்புகள் நீளுகின்றன. பல்வேறு நாடுகளில் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகள் இதை உறுதி செய்கின்றன.
பிளாஸ்டிக் கழிவுகளை எரித்து அகற்றுவது என்பதும் இலகுவான காரியமல்ல. பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால் 'டையாக்சின்' என்ற நச்சுப்பொருள் காற்றுடன் கலக்கிறது. இதனைச் சுவாசிப் பவர்களுக்கு புற்றுநோய் அபாயம் ஏற்படுவதாக எச்சரிக்கப்படுகிறது.
பிளாஸ்டிக் கழிவுகளைக் கடலில் கொட்டி வந்த அமெரிக்காவில் ஆண்டுதோறும் 40,000 சீல் விலங்குகள் மடியத் தொடங்கின. இதனால் பிளாஸ்டிக் கழிவுகளை கடலில் கொட்டுவதற்கு 1988 முதல் அமெரிக்கா தடைவிதித்தது.
இந்த மோசமான பின்விளைவுகளைக் கண்ட பின்னர் பிளாஸ்டிக்கை அதிக அளவில் உற்பத்தி செய்து பயன்படுத்தி வரும் மேற்குலக நாடுகள் பிளாஸ்டிக் கழிவுகளை மிகவும் நாசூக்காக மூன்றாம் உலக நாடுகளின் தலையில் கட்ட ஆரம்பித்துள்ளன. கணிசமான சலுகை விலையில் பிளாஸ்டிக் கழிவுகளை விற்கத் தொடங்கியிருப்பதுடன், கூடவே பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து பிளாஸ்டிக்கை மறு உற்பத்தி செய்யும் நுட்பத்தையும் சேர்த்துத் தருவதால் மூன்றாம் உலக நாடுகளும் பிளாஸ்டிக் கழிவுகளை வாங்கிக் குவித்து வருகின்றன.
ஆண்டுதோறும் அமெரிக்கா பயன்படுத்திவிட்டு தூக்கி வீசும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு கிட்டத்தட்ட 160 லட்சம் டன்கள். இவற்றில் 50 சதவீதம் இந்தியா, பங்காளதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு மறு உற்பத்தி என்ற பெயரில் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதில் மிகப் பெருமளவில் கொள்ளளவு செய்வது இந்தியாதான். பங்காளதேஷைவிட 115 சதவீதமும், பாகிஸ் தானைவிட 30 சதவீதமும் அதிகமாக இந்தியா பிளாஸ்டிக் கழிவுகளை வாங்கி வருகிறது.
இந்தியாவில் நச்சுக்கழிவுகளின் மறுசுழற்சியின் போது கழிவுகளைச் சூடுபடுத்தத் தேவைப்படும் ஆற்றலானது குறைந்தவிலை, இடவசதி சிக்கலின்மை, அதைச் செயல்படுத்த அரசின் சட்டதிட்டங்களில் உள்ள குறைபாடுகள் மற்றும் சுற்றுப்புறச்சூழல் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கும் அரசுக்கும் இல்லாமை ஆகியவற்றால் 'மறுசுழற்சி' என்ற தொழில் வளர மேலும் காரணமாகின்றன.
முறையாக தொழில்நுட்ப நடைமுறைகளைக் கையாண்டாலும் இதனால் உண்டாகும் மாசுக்கேடு, அழிவுகள் ஆகியவற்றிலிருந்து நாம்மீள முடியாது. இந்த அபாயமான வேலையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் எந்தப் பயற்சியும் அற்றவர்கள்; எந்த எச்சரிக்கையுணர்வும் ஊட்டப்படாதவர்கள்; பாதுகாப்புக் கருவிகள் அணியாதவர்கள். இதனால் எதிர்பாராமல் நிகழும் விபத்துகளில் அமைப்பு சாராத அத்தொழிலாளர்களுக்கு மருத்துவச் செலவோ அல்லது இழப்பீடோ கூடக் கிடைப்பதில்லை.
இதனால் அபாயமான, மட்டமான, நிலையில்லாத வேலைவாய்ப்புகள் உருவாவதற்கு வாய்ப்பு எற்பட்டுள்ளது.ஏறக்குறைய 3,50,000 பேர் இத்தொழிலில் ஈடுபட்டிருப்பதாக ஓர் அறிக்கை கூறுகிறது. அடுத்து இக்கழிவுகள் எங்கு உருவாக்கப்பட்டதோ அந்நாட்டிலேயே மறுசுழற்சி நடந்திருந்தால் உண்டாகக் கூடிய ஆரோக்கியக்கேட்டை ஏற்படுத்தும் இரட்டை விளைவை ஒரே நேரத்தில் உண்டாக்குகிறது.
பிளாஸ்டிக் மறுசுழற்சி குறித்து சுற்றுச்சூழல் வல்லுநர்கள் மேலும் சில கருத்துக்களை முன்வைக்கின்றனர். அதாவது, ஒருமுறை பயன்படுத்திய பின் தூக்கியெறியக் கூடிய பொருட்கள் அதிகளவில் உருவாக்குதல் தேவையற்றது. மேலும் அவை அபாயமான தனிமங்களைக் கொண்டவையாக (பிளாஸ்டிக் பாசிசம்) உருவாக்குதல் தேவையற்றது. ஒரு அபாயமான பொருளை மறுசுழற்சிக்கு உட் படுத்துவதால் அது மற்றொரு அபாயமான பொருளை உருவாக்குகிறது. எனவே மறுசுழற்சி அபாயமான பொருட்களைத் திரும்பவும் சந்தைக்கும், சுற்றுப்புறத்துக்கும் அதன் நச்சுத்தன்மையில் எந்தக் குறையுமின்றித் திரும்ப அனுப்புகின்றது.
ஆக இந்தியா போன்ற நாடுகள் பிளாஸ்டிக் மறுசுழற்சி உற்பத்தியால் மிக மோசமான அபாயமான விளைவுகளை எதிர்கொண்டுள்ளன. சென்னையை அடுத்த கும்மிடிபூண்டியில் டூ பாண்ட் நிறுவனம் நைலான் ஆலையை அமைத்ததன் பின்னணியை இந்த ரீதியில்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
அதே போல அமெரிக்க மக்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் குவளைகள், சீசாக்களைத் தயாரிக்க வென 'இந்திய ஆர்கானிக் கம்பெனி' மத்திய அரசின் அனுமதியுடன் எழுபத்தைந்து கோடி முதலீட்டில் தொழிற்சாலை நிறுவி வருகிறது.
அதிக மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா பிளாஸ்டிக் கழிவுகளால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுவதைத் தொடர்ந்து பிளாஸ்டிக்குக்கு எதிரான குரல்கள் ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன. சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் தலையீட்டினால் சுற்றுலாத்தளங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை முற்றாகத் தடை செய்யும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
சபரிமலைப் பகுதிகளில் திரளும் ஐயப்ப பக்தர்கள் விட்டுச் செல்லும் பாலித்தீன் கழிவுகளைத் தின்று யானைகளும், மான்களும் பலியாவது இப்போது சாதாரணமாகிவிட்ட ஒன்று. ராஜஸ்தானில் இறந்த ஒரு பசுவின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் பைகள் இருந்ததாகத் தெரிகிறது.
ஆண்டுக்கு எட்டரை லட்சம் மக்களுக்கும் அதிகமாக வந்து செல்லும் தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவிலும் கடந்த காலங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் ஏராளமான விலங்குகளுக்கு எமனாக அமைந்திருக்கின்றன. பார்வையாளர்களால் பயன்படுத்தப்பட்டு வீசப்படும் பாலித்தீன் பைகளைத் தின்று பரிதாபமாக உயிரைவிட்ட விலங்குகளின் பட்டியலில் காண்டா மிருகமும் ஆப்பிரிக்காவிலிருந்த மூன்றுலட்சம் ரூபாய் செலவில் தருவிக்கப்பட்ட லாமா என்னும் விலங்கும்கூட அடக்கம்.
தேசியப் பூங்காவிலும் ஒதுக்கப்பட்ட காடுகளிலும் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதை இந்திய அரசு முற்றாகவே தடை செய்துள்ளது. இருந்தும் இது தொடர்பாக மக்களின் விழிப்புணர்வு குறைவாகவே இருக்கிறதென்று சுற்றுச்சூழலியலாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவிற்கு பிளாஸ்டிக் வந்தது சமீபத்திய ஆண்டுகளில்தான். ஆனால் கடந்த ஏழு, எட்டு ஆண்டுகளில் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் வெகுவாக பரவிட்டன. பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படக்கூடிய விளைவுகள் அபாயங்கள் பற்றிய அக்கறைகைள உணர்ந்து வருகிறோம்.
பிளாஸ்டிக் பைகளின் தீயவிளைவுகளை உணர்ந்த இமாச்சல பிரதேச அரசு சிம்லாவில் பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்க 1996 ஜூலையில் தடைவிதித்தது. இதனைத் தொடர்ந்து 1998 ஜனவரியில் கோவா மாநிலத்தில் தடை செய்யப்பட்டது. பின்பு 1998 நவம்பரில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டது.இந்தப் பின்னணியில்தான் தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கும் சட்டமசோதாவை தாக்கல் செய்தது.
இது இன்னும் பரிசீலனையில்தான் உள்ளது. திடீரென்று பிளாஸ்டிகிற்கு தடைவிதிக்கும் போது அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளும் அதிகம். ஓர் குறித்த காலப்பகுதியை எல்லையாகக் கொண்டு செயற்பட வேண்டும். மேலும் பிளாஸ்டிக்குக்கு மாற்றான பயன்பாட்டை விளக்கும் வகையிலான விழிப்புணர்வும் நம்பிக்கையும் வளர்க்கப்பட வேண்டும்.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்க வேண்டுமென்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக்கின் ஊடாட்டம் நெருங்கிக் கலந்துவிட்ட நிலையில் பிளாஸ்டிக்கின் பிடியிலிருந்து முற்றாக விடுபடுவது என்பது முடியாத ஒன்றே. இந்நிலையில் அச்சுறுத்தும் பிளாஸ்டிக் அபாயத்தை எதிர்கொள்ள நம் முன்னால் உள்ள ஒரே வழி பிளாஸ்டிக் கழிவுகளை மேலாண்மை செய்வதுதான்.
தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள் வாங்குவதை தவிர்ப்பது (Refuse),தேவைகளை இயன்றளவு குறைத்துக் கொள்வது (Reduce) முடிந்தவரை நீண்டகாலம் திரும்பத் திரும்ப பயன்படுத்தும் முறைகளைக் கடைப்பிடிப்பது (Reuse), எறிவதற்கு முன்னர் இன்னொரு முறை பயன்படுமா என்று சிந்திப்பது (Retain) எறியும் கழிவுகளிலிருந்து சுற்றுச்சூழலுக்கு பாதகமில்லாத முறையில் மீளவும் பிளாஸ்டிக்கை பிரித்தெடுப்பது (Recycle) என்று இந்த ஐந்து செயல்பாடுகளையும் சரியான முறையில் ஒருங்கிணைக்கும் கழிவுமேலாண்மைதான் பிளாஸ்டிக்குக்கான மாற்று ஒன்றைக் கண்டறியும் வரைக்குமான குறைந்தபட்சத் தீர்வாக இருக்கமுடியும்.

Tuesday, July 21, 2009
தமிழ் நண்பர்கள் தங்க நட்பு
மாற்றத்துக்குட்பட்ட வாழ்க்கையில்
நிலையாக இருக்க நட்பு!
பனிச்சுமையில் மூழ்கும் மனதுக்கு
இதமாக இருக்க நட்பு!
ஆட்சிகள் மாறினாலும் சொந்தங்கள் கலைந்தாலும்
ஆழமான துணையாக நட்பு!
முகம் கூட பார்க்காமல் அதீத நம்பிக்கையில்
வளர்பிறையாக பிரகாசிக்க நட்பு!
இன்பம் துன்பம் எதுவானாலும்
இறுதி வரை தோள் கொடுக்க நட்பு!
இடம் தெரியாமல் தடம் பதித்தாலும்
துணையிருந்து காக்க நட்பு!
பாச மழையில் நனையும் நட்பு
வாழ்வை இனிதாய் நிறைக்கும் நட்பு
உள்ளூர் நட்பு! வெளியூர் நட்பு!
கடல் கடந்த காந்த நட்பு!
மடிக்கணினியில் தோன்றிய நட்பு!
இது ஆறு மணி நேர அன்பு நட்பு!
பள்ளி நட்பு கல்லூரி நட்பு
இதை விரட்டிய எமது
தமிழ் நண்பர்கள் தங்க நட்பு!
அடுத்து வரும்
சந்திப்பெனும் கொண்டாட்டத்திற்கு
ஆவலுடன்
காத்திருக்கேனப்பு!

Friday, July 17, 2009
என்னவளின் புன்னகை
எங்கிருந்து வந்தது
உன் புன்னகைக்கு மட்டும்
இத்தனை சக்தி!
சிதறிய கண்ணாடித் துகள்களில்
தெரியும் ஒவ்வொரு பிம்பத்திலும்
உன் இதயம் புன்னகைக்கிறதே!
உன்னைத் தீண்டினால்
அழகு புன்னகை
கலைந்திடுமோ என்று
சிறு தூறல் கூட
விலகிச் செல்கிறதே!
மின்னலின் வெட்டுகூட
என் தேவதையின்
புன்னகைப் பிரகாசத்தை மதித்து
மேகத்துள் ஆரம்பித்து
அங்கேயே மறைகிறதே நிமிடத்தில்!
நான் மட்டும் பேராசைப்பட்டு
என்னுள் சேமிக்க நினைத்தேன்....
ஈட்டியாக என் இதயத்தில் நுழைந்து
ஏக்கங்களை விதைத்து
எதிர்பார்ப்பைத் தூண்டி
தூக்கம் கெடுத்து
கனவுகளில் விழுந்து
தன்னிலை இழப்பேன்
என்று தெரியாமலே....
உன் புன்னகைக்கு மட்டும்
இத்தனை சக்தி!
சிதறிய கண்ணாடித் துகள்களில்
தெரியும் ஒவ்வொரு பிம்பத்திலும்
உன் இதயம் புன்னகைக்கிறதே!
உன்னைத் தீண்டினால்
அழகு புன்னகை
கலைந்திடுமோ என்று
சிறு தூறல் கூட
விலகிச் செல்கிறதே!
மின்னலின் வெட்டுகூட
என் தேவதையின்
புன்னகைப் பிரகாசத்தை மதித்து
மேகத்துள் ஆரம்பித்து
அங்கேயே மறைகிறதே நிமிடத்தில்!
நான் மட்டும் பேராசைப்பட்டு
என்னுள் சேமிக்க நினைத்தேன்....
ஈட்டியாக என் இதயத்தில் நுழைந்து
ஏக்கங்களை விதைத்து
எதிர்பார்ப்பைத் தூண்டி
தூக்கம் கெடுத்து
கனவுகளில் விழுந்து
தன்னிலை இழப்பேன்
என்று தெரியாமலே....
Friday, July 10, 2009
நிலைக்க மறுக்கும் நினைவலைகள்
நல்ல துயிலில் ஓர் இனிய கனவு
அந்த கனவின் விழிப்பில்
நினைவில் நிழலோடு கிறக்கம்
நினைத்த போதெல்லாம் ஏக்கம்
நினைவில்லாத போது மட்டும் தூக்கம்
மீண்டும் கனவின் தாக்கம்
எதுவும் பிடிக்கவில்லை
எதன் மீதும் கவனம் இல்லை
புரிந்தாலும் நாட்டம் இல்லை
வீடும் வெளிப்புறமும்
ஒன்றுபோல் தெரிகிறது
எனக்குள் நானே சிரிக்கிறேன்
அந்த சிரிப்பில் எனை நானே மறந்தேன்
மகிழ்ச்சியின் மடியிலே நான்....
சிந்தனை இலக்கில்லாமல் போக
நெஞ்சில் நிறைகின்றது ஏக்கம்
வழக்கம் இல்லாத் தேக்கம்
துடிக்கும் இந்த மனசு
எதை எதையோ நினைக்கும்
நிலைக்க மறுக்கும் நினைவலைகள்
அதன் பின்
தொடர்ந்து செல்லும் எண்ணங்கள்
அலைந்து திரியும் அமைதியின்மை
அதனால்
நிம்மதி தொலைந்து மனதில் வெறுமை
தெரியவில்லை புரியவில்லை
தன்னிறக்கத்தில் வாடும் மனதின் நிலை!
அந்த கனவின் விழிப்பில்
நினைவில் நிழலோடு கிறக்கம்
நினைத்த போதெல்லாம் ஏக்கம்
நினைவில்லாத போது மட்டும் தூக்கம்
மீண்டும் கனவின் தாக்கம்
எதுவும் பிடிக்கவில்லை
எதன் மீதும் கவனம் இல்லை
புரிந்தாலும் நாட்டம் இல்லை
வீடும் வெளிப்புறமும்
ஒன்றுபோல் தெரிகிறது
எனக்குள் நானே சிரிக்கிறேன்
அந்த சிரிப்பில் எனை நானே மறந்தேன்
மகிழ்ச்சியின் மடியிலே நான்....
சிந்தனை இலக்கில்லாமல் போக
நெஞ்சில் நிறைகின்றது ஏக்கம்
வழக்கம் இல்லாத் தேக்கம்
துடிக்கும் இந்த மனசு
எதை எதையோ நினைக்கும்
நிலைக்க மறுக்கும் நினைவலைகள்
அதன் பின்
தொடர்ந்து செல்லும் எண்ணங்கள்
அலைந்து திரியும் அமைதியின்மை
அதனால்
நிம்மதி தொலைந்து மனதில் வெறுமை
தெரியவில்லை புரியவில்லை
தன்னிறக்கத்தில் வாடும் மனதின் நிலை!
Sunday, July 5, 2009
இப்படியும் ரசிப்பேன்
விதவிதமான உடைகளில்
உன்னை பார்த்து
ரசித்து இருக்கிறேன் உன்னை பார்த்து
ஆனால்,
இன்று போல் என்றும் இல்லையடி
எனக்கென உணவு சமைத்த பொழுது...முத்து முத்தான வியர்வைத்துளிகளில்...
கையில் கரண்டியுடன்...
இடுப்பு நெளிவில் தூக்கிச் சொருகிய சேலையில்....அழகாய்த் தான் இருந்தாய்
மறுமுறை காணக் காத்துக் கிடக்கிறேன்
ஏன் எனில்
எப்பொழுதாவது தானே நீ சமைப்பாய்
காத்திருக்கிறேன் கண்ணே................
Wednesday, July 1, 2009
மழையில் நனைந்த காதல்
ஒரு நாள் மாலை நான் மொட்டை மாடியில் இருந்தேன். மாலை நேர பொழுது. வெயில் அதிகமாக இல்லை. வானத்தில் மேகங்கள் வாக்கிங் போய் கொண்டிருப்பதை ரசித்து கொண்டிருந்தேன்.இதமான தென்றல் காற்று வீச என் மீதிருந்த ஈரமெல்லாம் விலகியிருந்தது. ரம்மியமான சூழல். எதிர் வீட்டு சுடிதாரை ஆசையுடன் ரசித்துக் கொண்டிருந்தேன்.
தென்றல் காற்று குளிர் காற்றானது. அண்ணாந்து பார்த்தேன். வாக்கிங் சென்ற மேகங்கள் திடீரென்று கால் தடுக்கி கீழே விழ, உடனே, மழை பொழியத் தொடங்கியது.
கீழே அம்மா, "ஏய், மொட்டை மாடில காயப் போட்டுருக்கும் உன் அண்ணனோட பேண்ட்டை எடுத்துக்கிட்டு வா" என்று விரட்டினார்கள்.
ஓடி வந்த தம்பி,கொடியில் காய்ந்து கொண்டிருந்த என்னை 'வெடு'க்கென்று அள்ளி கையில் போட்டவாறு ஓடினான். போகும்போது, எதிர்த்த வீட்டில் காய்ந்துகொண்டிருந்த நீலக்கலர் சுட்தார், "நான் மட்டும் இங்கே தனியா நனையறபோது, நீ மட்டும் கீழே போறியேடா, இதுதான் காதலா?" என்று கோபத்துடன் என்னைக் கேட்பது போல் இருந்தது.
Tuesday, June 30, 2009
கூடித் திரிந்த பொழுதுகளில்
என் பிரியமானவளே!
உள்ளத்தில் உன் நினைவுகளுடன்
உறங்க மறுக்கின்றன கண்கள்
நெஞ்சத்தில் உன் கனவுகளுடன்
கேட்க மறுக்கின்றன செவிகள்
பார்வை தந்து இமைக்கவிடாதிருந்தவளே
கனவை தந்து உறக்கத்தை பறித்தவளே
தினமும் நீ சாய்ந்துறங்கும்
என் தோள்களைத் தடவித்தடவித் தான்
என்னையே நான் தூங்க வைக்கிறேன்
இனிமையான உன் குரலில்
மின்னும் உன் புன்னகையில்
பணிவான உன் பாசத்தில்
சின்னச் சின்னக் குறும்புகளில்
செல்லச் சண்டைகளில்
நாம் கூடித் திரிந்த பொழுதுகளில்
இடைவெளியில்லா உன் நினைவுகளில்…
பணிகளின் சுமையில் நான்கு சுவருக்குள்
உனைப் படைத்த பிரம்மனை நினைத்து - வியந்து
சிந்தை கிறங்கினேனடி நான்!!!!!!!!!..
--

Sunday, June 28, 2009
தந்தையே உனக்கு சமர்பணம்
குழந்தைப் பருவத்தில் நடக்க துணை வந்தாய்!
பள்ளிப் பருவத்தில் மிதிவண்டி கற்று கொடுத்தாய்!
இளமைப் பருவத்தில் துணிவு தந்தாய்!
கல்லூரிக் காலத்தில் பட்டம் பெற வைத்து மகிழ்ந்தாய்!
மணக் கோலத்திக் பார்த்து மகிழ்ந்தாய்!
புகுந்த விடுசெல்லும் போது கண் கலங்கினாய்!
வாழும் பாங்கினைப் பார்த்து பெருமை அடைந்தாய்!
கர்ப்பம் ஆன செய்தி கேட்டபோதே மகிழ்ந்தாய்
பிள்ளை பெறு பெற்று உயிர் பிழைத்தேன், கொண்டாடினாய்!
பேரக் குழந்தையின் வசீகர சிரிப்பில் உனை இழந்தாய்!
பள்ளி பருவத்தில் அவன் பேச்சில், கேள்வியில், புளகாங்கிதம் அடைந்தாய்
உனக்கு நன்றி உரைக்க ஆசை
இப்படியாவது, இப்போழுதாவது, இன்றாவது, தந்தையே................
மறு ஜென்மம் என்பதில்
எனக்கு உடன்பாடு இல்லை
தந்தையே .........................
தங்களுக்கு நம்பிக்கை இருந்தால்
எனக்கு மகனாகப் பிறந்து
நம்பிக்கை நட்சத்திரமாகிய
உங்களுக்குப் பணிவிடை
செய்ய பணிக்க வேண்டுகிறேன்
பள்ளிப் பருவத்தில் மிதிவண்டி கற்று கொடுத்தாய்!
இளமைப் பருவத்தில் துணிவு தந்தாய்!
கல்லூரிக் காலத்தில் பட்டம் பெற வைத்து மகிழ்ந்தாய்!
மணக் கோலத்திக் பார்த்து மகிழ்ந்தாய்!
புகுந்த விடுசெல்லும் போது கண் கலங்கினாய்!
கர்ப்பம் ஆன செய்தி கேட்டபோதே மகிழ்ந்தாய்
பிள்ளை பெறு பெற்று உயிர் பிழைத்தேன், கொண்டாடினாய்!
பேரக் குழந்தையின் வசீகர சிரிப்பில் உனை இழந்தாய்!
உனக்கு நன்றி உரைக்க ஆசை
இப்படியாவது, இப்போழுதாவது, இன்றாவது, தந்தையே................
மறு ஜென்மம் என்பதில்
எனக்கு உடன்பாடு இல்லை
தந்தையே .........................
தங்களுக்கு நம்பிக்கை இருந்தால்
நம்பிக்கை நட்சத்திரமாகிய
செய்ய பணிக்க வேண்டுகிறேன்
கடல் அலை
மறக்க முடியவில்லை
உன் பார்வை உன் பேச்சு உன் சிரிப்பு
வாலிபத்தின் தேடல் காதல் !
தென்றல் என்னை தழுவி செல்ல
கடற்கரை மணலில் தனிமையில் நான்
மெளனமான ஓசையுடன் தென்றல் !
என்னை அனைத்து செல்ல என்னை
முத்தமிட்டு சென்றாள் ஓருத்தி
என் மனம் தடுமாறி அலைபாய
என்னை முத்தமிட்டாவள் நகைத்து
செல்ல நானும் மெல்ல செல்ல
ஆதவன் மூழ்குவதை நான் ரசிக்க
அவள் மேனி சிவக்க தென்றல் நகைக்க
ஆகாயம் கறுக்க -என் தேவதையோ
பாத சுவடுகளை அழித்தாள் !
60க்கு -----------
நாதஸ்வர ஓசையும்
தவில் இசையும்
ஜ்யர் மந்திரமும்
ஜ்பூதமும்
சாட்சியாக வைத்து
இத்தனை வருட
வாழ்க்கைக்கு
இரண்டாம் முறையாக
உத்திரவாதம்.........
60 ஆம் கல்யாணம்
தெரியவில்லை
புரியவில்லை
செலவழித்து
நரகம் பார்க்கும்
மனிதர்களை
நீ
என்னவள் என்பதை
உறுதி செய்தேன்
நாற்பது ஆண்டூகளூக்கு முன்
இன்னும் உன் கடைகண்
பார்வைக்கு காத்துகிடப்பேன்
என் காலம் வரை!!!!!!!!!!!!!!!!
தவில் இசையும்
ஜ்யர் மந்திரமும்
ஜ்பூதமும்
சாட்சியாக வைத்து
இத்தனை வருட
வாழ்க்கைக்கு
இரண்டாம் முறையாக
உத்திரவாதம்.........
60 ஆம் கல்யாணம்
தெரியவில்லை
புரியவில்லை
செலவழித்து
நரகம் பார்க்கும்
மனிதர்களை
நீ
என்னவள் என்பதை
உறுதி செய்தேன்
நாற்பது ஆண்டூகளூக்கு முன்
இன்னும் உன் கடைகண்
பார்வைக்கு காத்துகிடப்பேன்
என் காலம் வரை!!!!!!!!!!!!!!!!
மௌனத்தின் பரிபாஷை
மௌனமே மொழியாய்
பார்வையே கேள்வியாய்
இதயம் ஏங்கி
இதழ்கள் தேங்கி
இமைகள் கலங்கி
தேகம் தேளானது
தனிமை உடைந்து தூளானது
ஒரு முனையில் நீ..
மறுமுனையில் நான்...
சத்தம் மட்டும் இல்லை...
ஆனால் பேசுகிறோம்..
அது உனக்கும் தெரியும்..எனக்கும் தெரியும்
உன் மனதை நீ மறைக்க, அதைக்கண்டு நானோ
கண்மூட மௌனியாய் நீ..
மௌனமாய் நான்...
என்னை உயிர்ப்பிக்க வாராயோ....

சிதையில் எரிந்த நினைவுகள்
இல்லாத ஒன்றைத் தேடி
நில்லாத உலகில் ஓடினேன்
செல்லாத இடங்களை நாடி
கல்லாத பல பாடம் பெற்றென்
இந்த அன்பின் தேடலின்
காதலின் தேடலின்
நிதர்சனங்களின் தேடலின்
இடைப்பட்ட காலத்தில்
வண்ணங்கள் பல மாறின
எண்ணங்கள் பல உழன்றன
பொழுதுகள் பல சுழன்றன
விழுதுகள் பல தோன்றின
என்னுள் ஊற்றெடுத்த நினைவுகளோ
ஒன்று இரண்டாகி....
இரண்டு நான்காகி.....
நான்கு எட்டாகி............
ஆழமாய்ப் பதிந்திருந்தன அவை எல்லாம்
என்னுள் கேட்டும் ஏற்கப் படாமல்
என் நெஞ்சினுள்ளேயே புதைந்திருந்தன
புரியாத இந்த இயந்திர உலகில்
மந்திரத்தால் கட்டுண்ட ஏக்கங்களை
மறைத்து வாழ்கின்ற வாழ்வில்
மனதுள் கூட்டிக் கழித்துப் பார்த்தால்,
நன்றாய்த்தான் எரியுது சிதையில்....
நில்லாத உலகில் ஓடினேன்
செல்லாத இடங்களை நாடி
கல்லாத பல பாடம் பெற்றென்
இந்த அன்பின் தேடலின்
காதலின் தேடலின்
நிதர்சனங்களின் தேடலின்
இடைப்பட்ட காலத்தில்
வண்ணங்கள் பல மாறின
எண்ணங்கள் பல உழன்றன
பொழுதுகள் பல சுழன்றன
விழுதுகள் பல தோன்றின
என்னுள் ஊற்றெடுத்த நினைவுகளோ
ஒன்று இரண்டாகி....
இரண்டு நான்காகி.....
நான்கு எட்டாகி............
ஆழமாய்ப் பதிந்திருந்தன அவை எல்லாம்
என்னுள் கேட்டும் ஏற்கப் படாமல்
என் நெஞ்சினுள்ளேயே புதைந்திருந்தன
புரியாத இந்த இயந்திர உலகில்
மந்திரத்தால் கட்டுண்ட ஏக்கங்களை
மறைத்து வாழ்கின்ற வாழ்வில்
மனதுள் கூட்டிக் கழித்துப் பார்த்தால்,
நன்றாய்த்தான் எரியுது சிதையில்....
காதலில் தொலைந்தேன்
காதலின் ஆதியும் அந்தமும் அறிய
ஆரம்பிக்கிறது தேடல்......பின்
உயிர் கசிந்து உள்ளம் உருகி
அன்பு மனம் நாடிஆசைத்தேரில் ஏறி
நான்கு விழிகளில் பவனித்துநேசங்கள் வெளிவர
மனம் இரண்டும் மோத
நீ என்ன நான் என்ன
எல்லாமும் நாம் என
காலங்கள் ஓடும்
காதலின் வேட்கையில்....
மெய் எது தெரியாமல்,நீ என்ன நான் என்ன
எல்லாமும் நாம் என
காலங்கள் ஓடும்
காதலின் வேட்கையில்....
உயிர் எது தெரியாமல்,
என்னை நான் தேடப் போய்
நான் தொலைந்த கதை இது
Subscribe to:
Posts (Atom)