உன்னையே நினைத்திருந்தேன்
உன் ஒவ்வொரு அசைவையும்
கவனித்திருந்தேன்
உன் அன்புக் கரங்களால் எனை அணைத்தாய்
எனக்குள் காதல் காய்ச்சல் தோன்றியதடி
நான் சொல்வதை இன்று
கண்மூடிக் கொஞ்சம் கேள்
என்னைப்போல் உன்னை
யாராலும் நேசிக்க முடியாது
ஏனென்றால்
நான் நேசிக்கும் அழகைப் போல்
யாராலும் உனை நேசிக்க முடியாது
பகலுக்காக சூரியன் ஒளிர்கிறது
இரவுக்காக சந்திரன் ஒளிர்கிறது
என் கண்கள் மட்டும்
நீ என் பெயரை உச்சரிக்கும்பொழுது
பிரகாசமாய் ஒளிர்கிறது
என் இதயத்தை எடுத்துக்கொண்டு
கிறங்க வைக்கும் உன் முத்தத்தால்
உன்னைக் காதலிக்கும் என்
ஆன்மாவை ஆசீர்வாதம் செய்!
இந்தக் காதல் காய்ச்சல்
புதிதல்ல அன்பே
ஆதாம் ஏவாளை
அணைத்த பொழுது
பற்றியெரிந்த அதே தீ தான்
கொதிக்கும் அதே காய்ச்சல் தான்
இப்போது எனக்கும்
நீ இறுக என்னை
அணைக்கும்போது
உன் இதழ்களை ஒற்றி
முத்தமிடும்போது
தோன்றும் இந்த காய்ச்சலை
அனுபவிக்க வேண்டுமடி!
போதை தரும் இந்த காய்ச்சலோடு
காதல் காய்ச்சலில்,
தகிக்கும் உடம்பு சூட்டில்,
உன் நினைவுகளில் புலம்ப,
இப்படி ஒரு இனிமையான வழியா???
Subscribe to:
Post Comments (Atom)
என் இதயத்தை எடுத்துக்கொண்டு
ReplyDeleteகிறங்க வைக்கும் உன் முத்தத்தால்
உன்னைக் காதலிக்கும் என்
ஆன்மாவை ஆசீர்வாதம் செய்!
அக்கா எவ்ளோ அருமையா எழுதி இருக்கீங்க ....
நீங்களும் காதல் செய்கிறிர்களோ!