Sunday, August 2, 2009

காதலின் பாதை

இன்று நேற்றா
உன்னை விரும்புகிறேன்

பல வருடங்களுக்கு முன்
மத்தாப்பின் ஒளியில்
மலர்ந்திருந்த வதனத்தைப்
பார்த்ததிலிருந்தே
நான் தொலைந்திருந்தேன்

நீயும் தான் எனை விரும்புகிறாய்
என் வருகையை எதிர்பார்க்கிறாய்
வராத போது துவண்டு விடுகிறாய்

ஆனால்,
காதலை மட்டும்
சொல்வதே இல்லை

கேட்டால்,
”என் இதயத்தோடு ஏன் விளையாடிகிறீர்கள்”
என்கிறாய்
இந்த சொல் மட்டும்
தாங்க முடியவில்லை கண்னே
களைத்தே போனேன் நான்
இந்த விளையாட்டில்
என் முகத்தை பார்த்து
தெரிந்து கொள்ள முடியாதா
நான் உண்மையானவன் என்று

சுயநலமாக என்னை மட்டும்
குற்றம் சொல்கிறாய்
உனக்கு காதலின் மேல் பயம்
எங்கு சென்றாலும்
எங்கு மறைந்தாலும்
நாம் இருவரும் ஒன்றென்பதை
ஏன் மறுக்கிறாய்

மாயைகளிலிருந்து தப்பித்து
காதலில் பொறுப்பேற்று
என்னுடன் சேர்ந்து வா
ஈருடல் ஓருயிராய்
செல்வோம் இனி காதலின் பாதை

2 comments:

  1. உங்கள் எழுத்துக்களுக்கு மெருகேற்றிக் கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    நல்லாயிருக்கு கவிதை! காதலின் பாதை!

    ReplyDelete
  2. மாயைகளிலிருந்து தப்பித்து
    காதலில் பொறுப்பேற்று
    என்னுடன் சேர்ந்து வா
    ஈருடல் ஓருயிராய்
    செல்வோம் இனி காதலின் பாதை

    மிக அருமை ....
    காதலிக்கும் பொது மட்டுமல்ல,
    கல்யாணத்திற்கு பின்பும்
    இப்படியே இருந்துவிட்டால்
    கொன்ற காதலுக்காக,
    நீதிமன்றம் ஏற தேவை இல்லையே ...

    ReplyDelete