Sunday, June 28, 2009

காதலில் தொலைந்தேன்

காதலின் ஆதியும் அந்தமும் அறிய
ஆரம்பிக்கிறது தேடல்......

பின்
உயிர் கசிந்து உள்ளம் உருகி
அன்பு மனம் நாடி
ஆசைத்தேரில் ஏறி
நான்கு விழிகளில் பவனித்து

நேசங்கள் வெளிவர
மனம் இரண்டும் மோத
நீ என்ன நான் என்ன
எல்லாமும் நாம் என

காலங்கள் ஓடும்
காதலின் வேட்கையில்....

மெய் எது தெரியாமல்,
உயிர் எது தெரியாமல்,

என்னை நான் தேடப் போய்
நான் தொலைந்த கதை இது

No comments:

Post a Comment