நீங்காமல் இருக்கிறாய்
நிழலைப் போல!
இதமாக அணைக்கிறாய்
இமையைப் போல!
கலையாத கனவாக
நித்தம் வதைக்கிறாய்!
நினைவின் விளிம்பு வரை
ஊடுருவிச் செல்கிறாய்!
பூவாக மலர்கிறாய்!
இதழ் மூடி சிரிக்கிறாய்!
சூழலாகப் படிகிறாய்!
நோகாமல் தேடுகிறாய்!
இதழ்கள் குவித்து
புருவங்கள் நெரித்து
கண்கள் பனித்து
வாயசைக்காமல்
முணுமுணுத்து
புன்னகையோடு
செவிமடுத்து....
நினைவுகளை உயிர்ப்பிக்கும்
வலிகளை லேசாக்கும்
தனிமையை சுகமாக்கும்
ஏக்களை எளிதாக்கும்
கனவை உயிராக்கும்
மௌனப்புயலே உன்னில் நான்
தொலைந்து போகிறேன்!
Subscribe to:
Post Comments (Atom)
நீங்க யார நினைத்து எழுதுனிங்களோ!!! எனக்கு என்னோட ஊர் ஞாபகம் வந்துச்சி !!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நான் ஊர்க்கு போனும் !!!!
ReplyDelete