எங்கிருந்து வந்தது
உன் புன்னகைக்கு மட்டும்
இத்தனை சக்தி!
சிதறிய கண்ணாடித் துகள்களில்
தெரியும் ஒவ்வொரு பிம்பத்திலும்
உன் இதயம் புன்னகைக்கிறதே!
உன்னைத் தீண்டினால்
அழகு புன்னகை
கலைந்திடுமோ என்று
சிறு தூறல் கூட
விலகிச் செல்கிறதே!
மின்னலின் வெட்டுகூட
என் தேவதையின்
புன்னகைப் பிரகாசத்தை மதித்து
மேகத்துள் ஆரம்பித்து
அங்கேயே மறைகிறதே நிமிடத்தில்!
நான் மட்டும் பேராசைப்பட்டு
என்னுள் சேமிக்க நினைத்தேன்....
ஈட்டியாக என் இதயத்தில் நுழைந்து
ஏக்கங்களை விதைத்து
எதிர்பார்ப்பைத் தூண்டி
தூக்கம் கெடுத்து
கனவுகளில் விழுந்து
தன்னிலை இழப்பேன்
என்று தெரியாமலே....
Subscribe to:
Post Comments (Atom)
நல்லா இருக்கு. தொடர்ந்து எழுதுங்க. உங்கள் கவிதைகளின் மெருகு தானாகவே கூடும்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.